மேல் சாதி பெண்களை காதலிச்சு கல்யாணம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை.! சாதிய மோதலை தூண்டும் திமுக தேர்தல் அறிக்கை

By Asianet TamilFirst Published Mar 20, 2021, 4:53 PM IST
Highlights

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் உயர் சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் 8 கிராம் தங்க காசு வழங்கப்படும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் உயர் சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் 8 கிராம் தங்க காசு வழங்கப்படும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இதன் மூலம் இளைஞர்களை தூண்டி , சாதிய மோதலை உருவாக்கி அதன் மூலம் வெற்றியை பெற்றுவிடலாம் என்று திமுக திட்டமிட்டுள்ளதை உணர்த்துவதாக அமைந்துள்ளது என்றும் அதே சமயம் மாற்று சாதி பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும் பொது வெளியில் விமர்சனங்கள் எழந்துள்ளது.

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மார்ச் 13ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை ஸ்டாலின் அறிவாலயத்தில் வெளியிட்டார். அப்போது, முக்கிய அம்சங்கள் என்று சிலவற்றை ஸ்டாலின் அறிவிப்பாக வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் தவிர இதர திட்டங்கள் தேர்தல் அறிக்கை புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். தி.மு.கவின் தேர்தல் அறிக்கை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில திட்டங்கள் தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து சாதிய மோதல்களை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களைல் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் அறிக்கையில் 259வதாக குறிப்பிடப்பட்டுள்ள அம்சத்தில், “கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கக் காசு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அமைதியாக உள்ள தமிழகத்தில் இளம் ஆண்களை தூண்டி , சாதிய மோதல்களை உருவாக்க தி.மு.க திட்டமிட்டுள்ளதாக பொது மக்கள் கருதுகின்றனர். அமைதிப் பூங்காவாக தமிழகத்தில் வகுப்பு மோதல்களை உருவாக்கி அதன் மூலம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று திமுக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

கலப்புத் திருமணம் என்பது ஆண் - பெண் என்ற இருவருக்கு இடையே நிகழும் இயற்கையான விஷயம், இதற்கு சாதிய சாயம் பூசுவது என்பது உள் நோக்கம் கொண்டது என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் தி.மு.கவின் இந்த அறிவிப்பு பெண்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக பெண்கள் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். உயர் சாதி பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை என்பதன் மூலம் பட்டியலின சமூகத்தினரை தி.மு.க தூண்டிவிட்டு ஆட்சியை பிடிக்க நினைப்பதாகவும் சமூக வலைதளங்களில் பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமூக நீதியை நிலை நாட்டுவதாக கூறிக் கொண்டு உண்மையில் சமூக சீர்குலைவுக்கான அறிவிப்புகளை தி.மு.க வெளியிட்டுள்ளது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு புறம் அராஜாகம் மற்றொரு புறம் சமுதாய சீர்குலைவு என தி.மு.க ஆட்சியை பிடிக்க அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. திமுக அறிவித்த  வாக்குறுதியினால் பல பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்ட சாதி மக்களின் ஓட்டு திமுகவிற்கு எதிராக வரும் சட்டமன்ற தேர்தலில்  இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

click me!