கொரோனா பரவல்... தமிழகத்தில் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை..!

Published : Mar 20, 2021, 03:28 PM ISTUpdated : Mar 20, 2021, 04:14 PM IST
கொரோனா பரவல்... தமிழகத்தில் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை..!

சுருக்கம்

தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு வரும் 22ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை வழங்க பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு வரும் 22ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை வழங்க பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், ’’தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த வகுப்புகளுக்கு இணையவழி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவி வருவதாலும், தொற்றால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடக்கும். அந்த பள்ளி மாணவர்களுக்காக விடுதிகள் வழக்கம் போல் செயல்படும்’’என அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!