திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கு.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்..!

By vinoth kumarFirst Published Aug 11, 2021, 5:20 PM IST
Highlights

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  நீதிமன்றத்திற்கு வந்து, முதன்மை மாவட்ட நீதிபதி தங்க மாரியப்பன் முன்னிலையில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில் 4வது குற்றவாளியாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சேர்க்கப்பட்டு கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று  இறுதி விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜாராகும்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதன்படி இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  நீதிமன்றத்திற்கு வந்து, முதன்மை மாவட்ட நீதிபதி தங்க மாரியப்பன் முன்னிலையில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட  அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் என்பவரும் ஆஜரானார். அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சி நபர்களும் ஒரே வழக்கிற்காக ஆஜரானதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!