நல்லபடியா பார்த்துக்கோங்கய்யா... ரெய்டு முடிந்ததும் ஓட்டமாய் ஓடிப்போய் பார்த்த எஸ்.பி.வேலுமணி..!

By Thiraviaraj RMFirst Published Aug 11, 2021, 4:06 PM IST
Highlights

பச்சாம்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய மேலும் இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல நினைத்தேன். ரெய்டு காரணமாக இன்று சென்று வந்தேன். ரெய்டு குறித்து கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று, பத்திரிக்கையாளர்களை விரைவில் சந்திக்கிறேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

நேற்று  காலைமுதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நிறைவடைந்தது.

 கோவை பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். நேற்று காலை தொடங்கிய சோதனை நள்ளிரவில் முடிந்த நிலையில், இரண்டாவது நாளாக  மீண்டும் இன்று காலை சோதனை துவங்கியுள்ளது. மொத்தம் 3 தளங்களைக் கொண்ட அந்த நிறுவனத்தின் 2 தளங்களில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மீதம் உள்ள ஒரு தளத்தில் சோதனை நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பச்சாம்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய மேலும் இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2 கேபிசி நிறுவனங்கள், விஎஸ்ஐ சாண்ட்ஸ் என மொத்தமாக மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணி, ''என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் தருவேன். இபிஎஸ், ஓபிஎஸ்சிடம் கலந்தாலோசித்துவிட்டு பதிலளிப்பேன். நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல நினைத்தேன். ரெய்டு காரணமாக இன்று சென்று வந்தேன். ரெய்டு குறித்து கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று, பத்திரிக்கையாளர்களை விரைவில் சந்திக்கிறேன். நியாயத்தின் பக்கம் நின்று ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி’’ என அவர் தெரிவித்தார். 

click me!