Dmk kongu: பிளானை பக்காவா முடித்த செந்தில் பாலாஜி.. கோவையை கொத்தாக வளைத்த ஸ்டாலின். டரியலான S.P வேலுமணி.

By Ezhilarasan BabuFirst Published Dec 15, 2021, 10:54 AM IST
Highlights

இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என மொத்தம் 900 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். 

அதிமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் என ஒவ்வொருவராக திமுகவில் இணைவார்கள்.. அதற்கு நான் தான் "ஓபனிங் பேட்ஸ்மேன்" என  அதிமுக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் கோவை நாகராஜன் கூறியிருப்பது. கொங்கு அதிமுகவின் கோட்டை என்று கர்ஜித்து வந்த வேலுமணி, தங்கமணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மற்ற ஸ்டாலின் காய் நகர்த்தி வரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரம் பிடித்து  திமுகவில் பரிவாரங்களுடனம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் அதிமுகவின் முன்னாள் கோவை எம்.பி நாகராஜன். 

எம்ஜிஆர் காலம்தொட்டே அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. பின்னர் செல்வி ஜெயலலிதாவின் காலத்தில் கோவை அதிமுகவின் எங்கு கோட்டையாகவே மாறியது. பின்னர் அவரது மறைவிற்குப் பிறகு அதிமுகவிற்கு வலுவான தலைமை இல்லாததால் இனி பெரிய அளவில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் தமிழகத்தின் தனக்கான தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பாஜகவும் கொங்கு மண்டலத்திலேயே தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில் கொங்குவில் பாஜகவின் அரசியல் கணக்கு வேலை செய்ய தொடங்கியுள்ளது. இதே நேரத்தில் அதிமுக-பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் கொங்கு மண்டலத்தில் இக்கூட்டணி  வெற்றியை அறுவடை செய்துள்ளது. திமுக ஆட்சியை கைப்பற்றியிருந்தால் கொங்குவில் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை. 

கொங்கு எப்போதுமே திமுகவுக்கு கைகூடாத கோட்டையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைந்துள்ளார். தேர்தலுக்கு முன்னரே மகேந்திரன் திமுகவிலிருந்து இருந்திருந்தால் கோவையில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்க முடியும் என ஸ்டாலினே வெளிப்படையாக கூறினார். அந்த அளவுக்கு கொங்கு திமுகவுக்கு எட்டாக் கனியாக இருந்து வருவதுதான் அதற்கு காரணம்.  குறிப்பாக கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் என மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் கோவை தெற்கு பகுதியை மட்டும் பாஜக கைப்பற்றியது. மீதமுள்ள 9 தொகுதிகளிலும் அதிமுகவே அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக தங்கமணி, வேலுமணியின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் கொங்கு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், இயல்பாகவே அதிமுக என்பது நமக்கான கட்சி என்ற மனநிலை கொங்கு பகுதி மக்களிடையே உருவாகியிருப்பதே இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.   

எனவே கொங்கு மண்டலத்தில் திமுகவால் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியாமல் போனது திமுகவுக்கு பெருத்த அடியாகவும் அவமானமாகவும் பார்க்கப்படுகிறது.  என்ன செய்தால் கொங்கு மண்டலத்தில் கொடியேற்ற முடியும் என்ற குழப்பம் திமுகவுக்கு பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் எதிர் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்குள் கொங்குவை கைப்பற்றியே ஆக வேண்டும் முனைப்பு அதிகரித்துள்ளது.  இந்நிலையில்தான் கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும்,  எதிர் வருகிற மேயர் தேர்தலிலாவது கோவையை கைப்பற்றி விட வேண்டும் என்று கணக்கு போட்டுவரும் ஸ்டாலின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமித்துள்ளார். அதற்காக கோவை பகுதியிலேயே தங்கியிருந்து கோவையில் திமுகவின் செல்வாக்கு உயர்த்த செந்தில்பாலாஜி அயராது பாடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக வில் ஓரங்கட்டப்பட்ட அடிப்பட்ட புள்ளிகளை திமுக பக்கம் இழுக்கும் முயற்சியில் செந்தில்பாலாஜி களமிறங்கி காய் நகர்த்தி வருகிறார். 

இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என மொத்தம் 900 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக சார்பாக 2014 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை நாகராஜன் எம்பி திமுகவில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசிய வார்த்தை கொங்கு அதிமுகவின் கோட்டை என்று மிதப்பில் இருந்து வந்த வேலுமணி, தங்கமணி போற்றேருக்கே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை நாகராஜன் பேசியதாவது:- கோவை மாவட்டத்தில் முதன்மை மாவட்டமாக மாற்ற தமிழக முதல்வர் வாக்குறுதி கொடுத்துள்ளார், கோவை மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டையாக மாற்றுவதற்காக அள்ளும் பகலும் பணியாற்றுவேன். ராமனுக்கு அணில்  போல கோவை மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு முதல்வருக்கு துணையாய் நின்று கோவை மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றுவேன்.

எதிர்காலத் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கவும் தமிழ் வளரவும் முதலமைச்சருடன் இணைந்து பாடுபடுவேன் என்னுடைய பாணியில் சொன்னால் எதிர்காலம் திமுகவிடம் தான் இருக்கிறது அதற்கு நான் தான் ஓபனிங் பேட்மேன் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் வந்து இணைவார்கள். என்னுடைய வருங்கால சந்ததி காப்பாற்றப்பட வேண்டும், தமிழினத்தை காப்பாற்ற வேண்டும்  காரணத்தினால்  திமுகவில் இணைந்தோம். 

தலைவர் கலைஞர் எப்படி தன்னுடைய ஆளுமைமிக்க அரசியலால் இந்தியாவின் பிரதமர்களை தன் கைவிரல்களில் வைத்திருந்தாரோ அதே போல் வருங்காலங்களில் தமிழக முதலமைச்சர் கைவிரல் நீட்டிப் அவர்தான் இந்தியாவின் பிரதமரும் ஜனாதிபதியும் வரவேண்டும் அந்த அளவிற்கு அரசியல் ஆளுமை கொண்ட தலைவராக தற்போது திகழ்ந்து வருகிறார் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் வருவார்கள் என புகழாரம் சூட்டினார்.  அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை நாகராஜனின் இந்த பேச்சு அதிமுக கோவை தளபதிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

click me!