Seeman: ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்கள் போல் பேசும் நீதிபதி.. இப்படி பேசுவது உங்களுக்கு அழகல்ல.. சீறும் சீமான்.!

By vinoth kumar  |  First Published Dec 15, 2021, 10:43 AM IST

 இப்படி பேசுவது நீதிபதிக்கான அழகல்ல. நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் பதவிகளும் பொறுப்புகளும் அந்த நீதிபதிகள் பதவியில் இருந்த போது அந்த அரசுகளுக்கு சாதகமான செயல்களை செய்திருப்பதையே வெளிப்படுத்துகிறது.


எதிர்கட்சியாக இருந்த போது கருத்து சுதந்திரம் குறித்து பேசிய திமுக தற்போது ஆளும் கட்சியான பிறகு கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிகின்றனர் என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். 

திருச்சி சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி புகழேந்தி கூறுகையில்;- தமிழக முதல்வர் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாக தற்போது பணியாற்றி வருகிறார். இதற்காக நீங்கள் ஒன்றும் பாராட்ட வேண்டாம். ஆனால் மைக் கிடைத்தது என்பதற்காகக் கண்டதை எல்லாம் பேச முடியாது எச்சரித்தனர். 

Latest Videos

இந்நிலையில், இது தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் நீதிபதிகள் மக்களுக்கு பொதுவானவர்களாக இருக்க வேண்டும். ஆளும்கட்சி மாவட்ட செயலாளர்கள் போல் பேசக்கூடாது. இப்படி பேசுவது நீதிபதிக்கான அழகல்ல. நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் பதவிகளும் பொறுப்புகளும் அந்த நீதிபதிகள் பதவியில் இருந்த போது அந்த அரசுகளுக்கு சாதகமான செயல்களை செய்திருப்பதையே வெளிப்படுத்துகிறது. 

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் காரணம். தேசபக்தி குறித்து பாடம் எடுக்கும் பா.ஜ.க உண்மையில் தேசத்திற்கு எதிரான கட்சியாகும். தேசத்தின் சொத்துக்களை கூறு போட்டு விற்று வருகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக வினருக்கு வேலை இல்லாததால் அண்ணாமலை உள்ளிட்டோர் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக ஆதரிக்கும்  மேகதாது அணையை எதிர்த்தும், மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலையுவர்வை எதிர்த்தும்  தமிழகத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எதிர் கட்சியாக இருந்த போது கருத்து சுதந்திரம் குறித்து பேசிய திமுக தற்போது ஆளும் கட்சியான பிறகு கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிகின்றனர் என சீமான் விமர்சனம் செய்துள்ளார். 

click me!