
காஞ்சிபுரம் திருவள்ளூரில் இயங்கிவரும் பெரும்பாலான மதுபான ஆலைகள் திமுகவினருடையது தான் எனவும் மது ஒழிப்பு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளூரில் பா.ம.க சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தமிழகத்தில் மதுவுக்கு எதிராக பெண்கள் போராடினால் தான் மது இல்லாத மாநிலமாக மாறும் என தெரிவித்தார்.
மது ஒழிப்பு பிரசாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழகத்தில் உள்ள 11 மதுபான ஆலைகளில் 6 ஆலைகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் தான் இயங்குவதாகவும் குறிபிட்டார்.
மேலும், தமிழகத்தில் உள்ள 7 பீர் ஆலைகளில் 6 திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் தான் இயங்குகின்றன.
இதில், பெரும்பாலான ஆலைகள் திமுகவினருடையது தான் எனவும், அதை மூடாமல் மதுவை ஒழிப்போம் என பிரசாரம் செய்து திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம் சாட்டினர்.