தினகரனை திஹார் சிறையில் அடைக்க உத்தரவு - டெல்லி நீதிமன்றம் அதிரடி

First Published May 1, 2017, 3:09 PM IST
Highlights
delhi court order to put dinakaran in tihar prison


இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மே 15 வரை திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

டெல்லி ஓட்டல் ஒன்றில் டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவரை கைது விசாரணை நடத்தியதில் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர். பின்னர்,  இன்று டெல்லி ஹிஸ் தசாரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையடுத்து தினகரன் தரப்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் தரப்பிலும் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவிற்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பின்னர், தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தற்போது காவல் கெடு முடிவடைந்ததையடுத்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தபட்டார்.

அவரை மே 15 வரை திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் மே 15 வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் விசாரணைக்கு தேவைபட்டால் காணொளி கட்சி மூலம் விசாரித்து கொள்ளலாம் என டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  

click me!