அதிமுகவின் பலவீனத்தினால் திமுக வென்றுள்ளது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பலவீனத்தினால் திமுக வென்றுள்ளது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய ஈரோடு இடைத்தேர்தல் முடிவு என்பது அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும், மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவமாக இருக்கும். அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் வரலாறு காணாத தோல்வியை இம்முறை சந்தித்துள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் தோல்வியை சந்தித்தாலும் அதற்கு அடுத்த தேர்தலிலேயே வெற்றியை சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்றதன் பிறகு தொடர்ந்து, தோல்வியை சந்தித்து வருகிறது. தற்போது நடைபெற்ற இந்த தேர்தலில் பலமான சாதகமான அம்சங்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்தது, மேற்கு மண்டலம் அதிமுகவிற்கு எப்பொழுதும் வலுவான மண்டலம், இடையில் நடைபெற்ற பொதுக்குழு சார்ந்த நீதிமன்ற வழக்கிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக தேர்தல்களில் திமுக அதிமுக நேரடியாக போட்டியிடும் பொழுது அந்த களம் சூடாக இருக்கும், ஆனால் தற்போது ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்திலும் அதனை எதிர்த்து திமுக இல்லாமல் கூட்டணி கட்சி ஆன காங்கிரஸ் நின்றது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடத்தேர்தலில் திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது… எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு!!
இந்த 21,22 மாதங்கள் நடந்த ஆட்சியில் குறைந்த காலத்தில் அதிக அதிருப்தியை சம்பாதித்த அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது. மக்களின் மனதில் அதிமுகவில் நிலவிய உக்கட்சி பிரச்சனை, குறிப்பாக அண்ணாமலை செய்த பஞ்சாயத்தும் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை என்றார் போல் சிறிது நேரத்திற்கு முன்பு கூட அதிமுக ஒற்றுமை இல்லை என அண்ணாமலை கூறி இருக்கிறார், அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலை யார்?. இதனை வைத்து பார்க்கும் பொழுது பாஜகவிற்கு அதிமுக அடிமைப்பட்டு விட்டது. அதிமுகவை பாஜக அழிக்கிறது. சி.டி.ரவி, அண்ணாமலை ஆகியோர் வெளிப்படையாக ஊடகங்களில் பஞ்சாயத்து செய்தார்கள். அண்ணாமலை பிரச்சாரத்திற்கு வராமல் இருந்திருந்தால் கூட பத்தாயிரம் போட்டு சேர்த்து கிடைத்திருக்கும். அதிமுக வலிமையான கட்சி தான் அதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் என்கின்ற இரண்டு சுயநலவாதிகளால் இந்த இயக்கம் சிக்குண்டு கிடைக்கிறது. பாஜக நாட்டாமை செய்வதால் இந்த இயக்கம் சிக்குண்டு கிடைக்கிறது. மேலும் அதிமுக தோற்றத்திற்கு மற்றொரு காரணம் என்னவென்றால் திமுக கூட்டணிக்கு ஆதரவாக முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின், கமலஹாசன் உள்ளிட்டோரெல்லாம் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் அதிமுகவில், எடப்பாடி பழனிச்சாமியின் முதல் பிரச்சாரத்திலேயே அவர் அவுட் ஆகிவிட்டார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி ஆட்சியின் வெற்றி… மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ளும் பொழுது மீசை வைத்து உள்ளீர்களா, வேஷ்டி கட்டி உள்ளீர்களா என்றார் ஆனால் அதிமுக கட்சியை அம்மா வழியில் நடத்திய கட்சி அவர் மீசை வைத்திருந்தார்களா வேஷ்டி கட்டி இருந்தார்களா?. ஊழல் வழக்குகளை சந்திக்கும் எஸ்.பி.வேலுமணி இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டார். எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசுகின்ற தன்மை எதுவும் இல்லை. அதிமுகவின் பலவீனத்தினால் திமுக வென்றுள்ளது. பாஜக என்கிற மதவாத சக்தி தமிழகத்தை ஆளத் துடிக்கிறது. அதனை தடுத்து நிறுத்துவதற்கு திராவிடம் என்ற யுத்தியை ஸ்டாலின் கடைப்பிடிக்கிறார். அதிமுக பாஜகவாலும் பாதிக்கப்படுகிறது திமுகவாலும் பதிக்கப்படுகிறது. அதிமுகவில் அடிப்படை தொண்டர்களால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி தேர்தல் நடத்தப்பட்டால் பொதுச் செயலாளர் பதவிக்காக நான் போட்டியிடுவேன் யாருக்காகவும் அதனை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.