கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு..? நிர்வாகிகளுக்கு திமுக தலைமை புதிய உத்தரவு

By Ajmal Khan  |  First Published May 1, 2023, 12:39 PM IST

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
கர்நாடக மாநில அனைத்து அமைப்புகளுக்கும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கர்நாடக சட்டமன்ற தேர்தல்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வருகிற 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பாஜக கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளுக்கு ஆட்சியை பிடிக்க தீவிரமாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதே போல ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியும் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில் பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் திமுக தங்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருந்தது. இதனையடுத்து திமுகபொதுச்செயலாளர் துரைமுருகன் கர்நாடக மாநில திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதில்,

Tap to resize

Latest Videos

அண்ணாமலையை ஒருமையில் பேசுவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.! ஜெயக்குமாருக்கு எச்சரிக்கை விடுத்த அமர் பிரசாத்

காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு

வருகிற 2023 மே 10 அன்று கருநாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும், கருநாடக மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி,  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய  வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

நீ ஒரு இன்டர்மீடியன்..! ஆடிட்டர் இல்லை.. செய்தி போடுங்கன்னு கெஞ்சவில்லை- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை

click me!