30 ஆயிரம் கோடி சர்ச்சை ஆடியோ..! திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிடிஆர்- என்ன காரணம் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published May 1, 2023, 11:36 AM IST

உதயநிதி மற்றும் சபரீசன் தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.


பிடிஆர் சர்ச்சை ஆடியோ

தமிழக நிதி அமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், இவர் பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்  தமிழக அமைச்சர் உதயநிதியும், முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகனுமான சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் திணறிக்கொண்டு இருப்பதாக அந்த ஆடியோ பதிவில் பதிவாகியுள்ளது.  இதற்கு பதில் அளித்த பிடிஆர் திமுக தலைவரிடம் இருந்த என்னை  பிரிப்பதன் மூலம் தங்கள் அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு மிரட்டல் கும்பல் என பதிலளித்தார். மேலும் இந்த ஆடியோ போலியானது என தெரிவித்திருந்தார். 

Latest Videos

undefined

அண்ணாமலையை ஒருமையில் பேசுவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.! ஜெயக்குமாருக்கு எச்சரிக்கை விடுத்த அமர் பிரசாத்

மறுப்பு தெரிவித்த பிடிஆர்

இதற்கு பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை,   "திமுகவின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்களைத் தவிர, வேறு யாரும் நிதி அமைச்சரின் இந்தத் தற்காப்பு பதிலை நம்ப மாட்டார்கள். அந்த ஆடியோ பற்றி சுதந்திரமான தடயவியல் ஆய்வுக்கு அழைப்பு விடுப்பதில் இருந்து நிதி அமைச்சரை தடுப்பது எது?" எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். இதனையடுத்து மீண்டும் இரண்டாவது ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டார். அதில் கட்சியையும், ஆட்சியையும் பாஜக பிரித்து பார்ப்பது சரியென குறிப்பிட்டிருந்தார். அப்போது தான் சரியான முடிவு எடுக்கமுடியும் என பிடிஆர் கூறியிருப்பதாக அந்த ஆடியோவில் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து வீடியோ மூலம் பதில் அளித்த பிடிஆர் ஆடியோவில் உள்ள எந்த செய்தியையும் எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை. எனக்கு நல்ல வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் சபரீசன் மற்றும் உதயநிதி இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.


ஸ்டாலினை சந்தித்த பிடிஆர்

இந்த பிரச்சனைகளுக்கு இடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அமைச்சர் பிடிஆர் பல முறை முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதால் சந்திக்க முடியவில்லையென கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினின் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் பிடிஆர் முதலமைச்சரை சந்தித்துள்ளார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ தொடர்பாக விளக்கம் அளித்ததாக தெரிகிறது. மேலும் நாளைய தினம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் நிதி நிலை தொடர்பாகவும், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசித்ததாக தெரிகிறது. 

இதையும் படியுங்கள்

நீ ஒரு இன்டர்மீடியன்..! ஆடிட்டர் இல்லை.. செய்தி போடுங்கன்னு கெஞ்சவில்லை- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை

click me!