நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை பாஜக பிளாக்மெயில் செய்கிறது - அழகிரி குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published May 1, 2023, 10:43 AM IST

பாஜக இந்தியா முழுவதும் எதிர்கட்சிகளை  ப்ளாக்மெயில்  செய்யும் வேலை செய்து வருகிறது, நிதியமைச்சர் ஆடியோ வெளியீடு தொடர்பாக  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெரம்பலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளருமான வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன்  பலத்த காயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்த நிலையில் பெரம்பலூருக்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மாநில செயலாளர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார். 

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்  சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் தமிழ்செல்வனை நலம் விசாரித்து நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி,

Latest Videos

12 மணி நேர வேலை மசோதா முழுமையாக திரும்பப்பெறப்பட்டது.! விட்டுக் கொடுப்பது அவமானமில்லை, பெருமை - மு.க.ஸ்டாலின்

தமிழக நிதியமைச்சர் பேசியது போன்ற ஆடியோவை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு எதிர்கட்சிகளை  ப்ளாக் மெயில் செய்வது போன்றது. இந்த முழுவதும் பா.ஜ.க எதிர்கட்சிகளை இது போன்று ப்ளாக்மெயில் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க என்றும் கூறினார்

மேலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும். தங்களுக்குள் எவ்வித உட்கட்சிபூசலும் இல்லை. கர்நாடகாவில் பாஜக பொதுக்கூட்ட மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்திய விவகாரம் தொடர்பாக அண்ணாமலை கூறிய பதில் வேடிக்கையாக உள்ளது. கர்நாடக தேர்தல் களம் அகில இந்திய காங்கிரஸிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.

click me!