உங்கள் பெண் வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். பஸ்சுக்கு அம்மாவிடம் போய் கேட்காதே. நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே.
கல்லூரி மாணவிகளுக்கு அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகையை எப்படி செலவிட வேண்டும் என மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கண்டனங்களும் எழுந்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்
உங்கள் பெண் வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். பஸ்சுக்கு அம்மாவிடம் போய் கேட்காதே. நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே. ஒரு செல்போன் வாங்கி வச்சுக்கோ. அதுல நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு என்று அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம் என்று பேசியிருந்தார். ஒரு மூத்த அமைச்சர் இப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த சிடிஆர்.நிர்மல் குமார் துரைமுருகனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆயிரம் ரூபாய் கொடுத்து பசங்களோட ஊர் சுத்துங்க-னு சொல்றதுக்கு பெயர் என்ன தொழில் தெரியுமா அறிவாலயம்?
ஆயிரம் ரூபாய் கொடுத்து பசங்களோட ஊர் சுத்துங்க-னு சொல்றதுக்கு பெயர் என்ன தொழில் தெரியுமா ?
ஏழை மாணவிகள் படிப்பிற்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாயை இதற்கு மேலும் கேவலப்படுத்த முடியுமா ? pic.twitter.com/RSjrR3c28M
ஏழை மாணவிகள் படிப்பிற்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாயை இதற்கு மேலும் கேவலப்படுத்த முடியுமா? என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு வீடியோவை இணைத்துள்ளார். தற்போது இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.