மாணவன் தனுஷ் சாவுக்கு முழுக்க, முழுக்க திமுக அரசு தான்.. வெளிநடப்பு செய்ததுமே வெளுத்து கட்டிய எடப்பாடியார்.!

Published : Sep 13, 2021, 11:22 AM ISTUpdated : Sep 13, 2021, 11:23 AM IST
மாணவன் தனுஷ் சாவுக்கு முழுக்க, முழுக்க திமுக அரசு தான்.. வெளிநடப்பு செய்ததுமே வெளுத்து கட்டிய எடப்பாடியார்.!

சுருக்கம்

திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்கள். ஆட்சி அமைந்ததும் நீட் ரத்தாகும் என்றனர். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. தெளிவான முடிவெடுத்து அறிவிக்காததால் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்திலேயே மாணவர்கள் தற்போது நீட் தேர்வு எழுதியுள்ளனர். 

நீட் தேர்வை அதிமுக அரசு ரத்து செய்தபோது அது அயோக்கியத்தனம் எனக்கூறியவர் திமுக எம்.பி.ராசா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று  நீட் விலக்கு சட்ட மசோதா மற்றும் வாணியம்பாடி படுகொலை தொடர்பாக விவாதம் எழுந்தது. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியிருந்தீர்கள். நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் நேற்று மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று கூறினார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ஜெயலலிதா இருக்கும்போது கூட நீட் தேர்வு வரவில்லை. நீங்கள் இருக்கும்போதுதான் வந்தது என ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து திமுக - அதிமுக இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திருப்பத்துார் மாவட்டத்தில் வாணியம்பாடியில் கஞ்சா விற்பனையை சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலரை சமூக விரோதிககள் கொலை செய்தனர். குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அவரது குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்கள். ஆட்சி அமைந்ததும் நீட் ரத்தாகும் என்றனர். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. தெளிவான முடிவெடுத்து அறிவிக்காததால் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்திலேயே மாணவர்கள் தற்போது நீட் தேர்வு எழுதியுள்ளனர். நீட் தேர்வு அச்சம் காரணமாக மேட்டூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டான். மாணவன் சாவுக்கு முழுக்க, முழுக்க திமுக அரசு தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்பும் நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு சட்டப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தியது. உச்சநீதிமன்றமும் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக யாராவது செயல்பட முடியுமா? நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக தீர்மானம் கொண்டு வந்தபோது அது அயோக்கியத்தனம் என திமுகவின் ஆ.ராசா கூறினார். இப்போது திமுக கொண்டுவரும் தீர்மானத்திற்கும் அவரின் கருத்து பொருந்துமா? என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி