குற்ற பின்னணி கொண்ட நபர்.. லாவகமாக மகளை காப்பாற்றிய அமைச்சர்.. மும்பை ஆபரேஷன் தகவல்கள்..!

By Selva KathirFirst Published Sep 13, 2021, 10:20 AM IST
Highlights

6 வருடமாக காதலிப்பதாக கூறும் நபருடன் கடந்த மாதம் வீட்டை விட்டுச் சென்ற மகள் ஜெய கல்யாணியை பெரும் போராட்டம் நடத்தி மீட்டு வந்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

6 வருடமாக காதலிப்பதாக கூறும் நபருடன் கடந்த மாதம் வீட்டை விட்டுச் சென்ற மகள் ஜெய கல்யாணியை பெரும் போராட்டம் நடத்தி மீட்டு வந்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அமைச்சர் சேகர்பாபு வசிக்கும் ஏரியாவில் பல வருடங்களாக வசித்து வருகிறார். சதீஷ்குமாரும் சில காலம் திமுகவில் உறுப்பினராக இருந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அமைச்சர் சேகர்பாபு வீட்டிற்கு கட்சிப்பணிகளுக்காக சென்று வந்துள்ளார் சதீஷ்குமார். அப்போது தான் சேகர்பாபுவின் மகள் ஜெய கல்யாணியுடன் சதீசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சேகர் பாபுவின் மகள் எம்பிபிஎஸ் படித்துவிட்டு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த சதீஷ்குமாரும் மருத்துவம் தொடர்பான ஏதோ ஒரு படிப்பை படித்ததாக கூறுகிறார்கள்.

இந்த காரணத்தினால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் ஒரு கட்டத்தில் நட்பாகி பிறகு காதலானதாக சொல்கிறார்கள். சதீஷ்குமார் – ஜெயகல்யாணி காதலிக்கும் விவகாரம் சில வருடங்களிலேயே சேகர் பாபு வீட்டிற்கு தெரிந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் மகள் மேஜர் என்பதால் அவளுடைய விருப்பம் என்று சேகர்பாபு முதலில்  இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருந்தாக சொல்கிறார்கள். ஆனாலும் கூட, மகள் பழகும் நபரை பற்றிய விசாரணையை ஒரு கட்டத்தில் சேகர்பாபு மேற்கொண்டிருக்கிறார். அப்போது தான் சதீஷ் குமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஓட்டேரி காவல் நிலையத்தில் போக்கிரிகள் பட்டியலிலும் சதீஷ்குமார் பெயர் இருந்துள்ளது. இந்த காரணத்திற்காக மகளை, சதீசுடன் பழக வேண்டாம் என்று சேகர் பாபு கூறியுள்ளார். தந்தையின் அறிவுரையில் நியாயம் இருப்பதாக உணர்ந்து ஒரு கட்டத்தில் சதீஷ்குமாருடனான பழக்கத்தை ஜெய கல்யாணி கைவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் பிறகு சுமார் ஆறு மாத கால இடைவெளியில் மறுபடியும் சதீஷ்குமாருடன் ஜெய கல்யாணி நெருக்கமாகியுள்ளார். இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து சேகர் பாபு அமைச்சராகிவிட்டார்.

தந்தை அமைச்சரான நிலையில் சதீஷ்குமாரையே தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ஜெயகல்யாணி வலியுறுத்தியதாக கூறுகிறார்கள். ஆனால் காவல் நிலையத்தில் போக்கிரிகள் பட்டியலில் பெயர் உள்ள ஒருவனை எப்படி மருமகனாக ஏற்க முடியும் என்று சேகர் பாபு மறுத்ததாக கூறுகிறார்கள். இந்த சூழலில் தான்  ஜெயகல்யாணியை அழைத்துக் கொண்டு சதீஷ் எஸ்கேப் ஆகியுள்ளார். மகள் வீட்டை விட்டு போன தகவலை காதும் காதும் வைத்தது போல் அமைச்சர் ஹேண்டில் செய்துள்ளார். மேலும் ஜெய கல்யாணி எங்கு சென்றார் என்கிற தகவலை துவக்கத்தில் அறிந்து கொள்ள முடியவில்லை.

பிறகு இது தொடர்பாக ரகசியமாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஓட்டேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு டிசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்போது சதீஷ் தனது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பைக்கு ரயிலில் டிக்கெட் எடுத்திருநத்து தெரியவந்தது. இதனை அடுத்து சதீஷீன் மும்பை தொடர்புகள் குறித்து போலீசார் விசாரித்த போது அவர் கொலாபா பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் வீடு ஒன்றில் இருந்த சதீஷ்குமார் – ஜெயகல்யாணி ஜோடியை அடுத்த விமானத்தில் சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்துள்ளது.

சென்னை ஓட்டேரியில் உள்ள பங்களா ஒன்றில் போலீசார் முன்னிலையில் சதீஷ்குமார் குடும்பத்தினருடன் அமைச்சரின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறுகிறார்கள். அப்போது சதீஷ்குமார் மீதுள்ள குற்றச்சாட்டுகள், வழக்குகள் பற்றி போலீசார் ஜெயகல்யாணியிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். மேலும் சதீஷ்குமார் மீதான ஒரு தீவிரமான குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ஒரு பெண்ணை அழைத்து வந்து ஜெயகல்யாணியுடன் பேச வைத்துள்ளனர். இதன் பிறகே ஜெயகல்யாணி சதீஷை விட்டுவிட்டு பெற்றோருடன் செல்ல ஒப்புக் கொண்டு தற்போது அமைச்சர் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

click me!