நடுரோட்டில் ஆட்டை வெட்டி ரசிகர்கள் அட்ராசிட்டி.. ரஜினியை கைது செய்ய சொல்லி கொந்தளிக்கும் வழக்கறிஞர்.

Published : Sep 13, 2021, 10:46 AM ISTUpdated : Sep 13, 2021, 07:17 PM IST
நடுரோட்டில் ஆட்டை வெட்டி ரசிகர்கள் அட்ராசிட்டி.. ரஜினியை கைது செய்ய சொல்லி கொந்தளிக்கும் வழக்கறிஞர்.

சுருக்கம்

பொது இடத்தில், சாலையில், குழந்தைகள் பெண்கள் நடக்கும் இடத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமாக அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி சமூக ஆர்வலர்களால் பொதுமக்களால் விமர்சனத்திற்கு உள்ளாகிறது, 

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர்  டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நான் மேற்படி முகவரியில் இருந்து வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறேன். இந்த மனுவில் யாதொரு உள்நோக்கமும், சுயநலமும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறேன்.  கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் பேனர் முன்பு நடுரோட்டில் கொடூரமாக ஒரு ஆட்டை பட்டா கத்திக் கொண்டு வெட்டி பேனருக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

பொது இடத்தில், சாலையில், குழந்தைகள் பெண்கள் நடக்கும் இடத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமாக அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி சமூக ஆர்வலர்களால் பொதுமக்களால் விமர்சனத்திற்கு உள்ளாகிறது, இன்றைய தேதிவரை இச்செயலை எதிர்த்து ஒரு கண்டனம், எதிர்ப்பு அறிக்கையோ, விளக்கமோ ரஜினிகாந்த் அவர்கள் கொடுக்கவில்லை. இச்செயலை ஆதரிப்பது போலவே உள்ளார். இது பொது மக்களுக்கு அச்சத்தையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாக்கும்.

மேலும் மிருகவதையும் அடங்கும், கோயில்களில் ஆடு பலி இடுவதே ஓரமாக ஒதுக்குப்புறமாக செய்யும் நாடு, மேலும் கசாப்பு கடையில் கூட மறைவாகதான் ஆட்டை அறுப்பார்கள், ஆனால் இப்படி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கூடியிருக்கும் இடத்தில் இப்படி ஒரு கொடூரமான செயலை செய்த மேற்படி நபர்களை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இச்செயலை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி