AIADMK: அதிமுக ஆக்கி வைத்த சோற்றை சாப்பிடும் திமுக.. ஸ்டாலின் அரசை ஒரு கை பார்க்கும் எடப்பாடியார்..!

Published : Jan 11, 2022, 01:14 PM IST
AIADMK: அதிமுக ஆக்கி வைத்த சோற்றை சாப்பிடும் திமுக.. ஸ்டாலின் அரசை ஒரு கை பார்க்கும் எடப்பாடியார்..!

சுருக்கம்

ஜெட் வேகத்தில் கொரோனா பரவுவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சரே பேட்டி அளித்துள்ளார். கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டமைப்புகள் எதையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை. கொரோனா பரவலை தடுக்கும் கட்டமைப்பு அதிமுக ஆட்சியிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது.

அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்தோம். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக அரசு சரியாக வாதாடததால் உரிமையாளர்களுக்கு சாதகமாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 3வது அலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் ழுழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 6000 கடந்துள்ளது. இதேபோல், மற்ற மாவட்டங்களான செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட இடங்களில் கணிசமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- ஜெட் வேகத்தில் கொரோனா பரவுவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சரே பேட்டி அளித்துள்ளார். கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டமைப்புகள் எதையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை. கொரோனா பரவலை தடுக்கும் கட்டமைப்பு அதிமுக ஆட்சியிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. கொரோனா பரவலை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. அதிமுக ஆட்சியில் ஏற்படுத்திய மருத்துவ வசதியை திமுக அரசு சரியான பயன்படுத்தவில்லை. 

தமிழ்நாட்டில் திறக்கப்படவுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது தான். அதிமுக ஆக்கி வைத்த சோற்றை திமுக சாப்பிடுகிறது. வடகிழக்கு பருவமைழையின் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு எடுக்கவில்லை. சென்னையில் எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கும் என்ற ஆய்வை திமுக அரசு மேற்கொள்ளவில்லை. அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்தோம். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக அரசு சரியாக வாதாடததால் உரிமையாளர்களுக்கு சாதகமாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!