மறைந்தார் க. அன்பழகன்... 85 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்.. 43 ஆண்டுகள் திமுக பொதுச்செயலாளர்!

Published : Mar 07, 2020, 07:48 AM ISTUpdated : Mar 07, 2020, 07:49 AM IST
மறைந்தார் க. அன்பழகன்... 85 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்.. 43 ஆண்டுகள் திமுக பொதுச்செயலாளர்!

சுருக்கம்

வயது முதிர்வால், அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை ஏற்கவில்லை. நேற்று இரவு, 8 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த மு.க. ஸ்டாலின், நள்ளிரவு 12 மணியளாவில் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த க. அன்பழகன், சிகிச்சை பலனின்றி  நள்ளிரவு 1.10 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.  

வயது முதிர்வால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் மறைந்தார். 
திராவிட இயக்க மூத்த முன்னோடிகளில் ஒருவரும் தமிழக அரசியலில் மூத்த  தலைவர்களில் ஒருவரும் திமுகவின் 43 ஆண்டுகால பொதுச்செயலாளரும் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான  க. அன்பழகன் வயது மூப்பு, உடல் நலம் பாதிப்பால் வீட்டிலேயே ஓய்வில் இருந்துவந்தார். அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வால், அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை ஏற்கவில்லை. நேற்று இரவு, 8 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த மு.க. ஸ்டாலின், நள்ளிரவு 12 மணியளாவில் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த க. அன்பழகன், சிகிச்சை பலனின்றி  நள்ளிரவு 1.10 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.


க. அன்பழகன் மரணத்தை அறிந்ததும் மருத்துவமனையில் இருந்த மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தினார். மருத்துவமனையில் இருந்த திமுக நிர்வாகிகளும் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டனர். இதனையடுத்து சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள திமுகவினர் அப்பலோ மருத்துவமனைக்கு படையெடுத்தனர். அதனையடுத்து க.அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
க. அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் இன்று உடல் தகனம் செய்யப்பட உள்ளது. அன்பழகனின் மறைவுக்கு திமுக 7 நாட்கள் துக்கம் அனுசரித்துள்ளது. திமுகவின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. க. அன்பழகன் 85 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர். திமுகவின் பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்