க.அன்பழகனுக்கு சிகிச்சை ஒத்துழைக்கவில்லை... மு.க. ஸ்டாலின் தகவல்!

Published : Mar 06, 2020, 10:26 PM IST
க.அன்பழகனுக்கு சிகிச்சை ஒத்துழைக்கவில்லை... மு.க. ஸ்டாலின்  தகவல்!

சுருக்கம்

 98 வயதான க. அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. செயற்கை சுவாசத்தில் க.அன்பழகன் இருந்துவருகிறார். 

வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனின் உடல் ஒத்துழைக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். 
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.  ஆனால், அவருடைய உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 98 வயதான க. அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. செயற்கை சுவாசத்தில் க.அன்பழகன் இருந்துவருகிறார். க. அன்பழகனை மருத்துவமனைக்கு சென்று மு.க. ஸ்டாலின் அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்துவருகிறார். இந்நிலையில் இன்று மாலை மு.க. ஸ்டாலின் அப்பலோ மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் வந்தனர். மருத்துவமனையில் அன்பழகனின் உடல்நிலையை மருத்துவர்களிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார்.


மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திமுக பொதுச்செயலாளர் பேராசியர் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை. தொடர்ந்து மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்துவருகிறார்கள்.” என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!