திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்து கவலைக்கிடம்..!

By Manikandan S R S  |  First Published Mar 4, 2020, 12:58 PM IST

தொடர்ந்து 10 நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அன்பழகன் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


திமுக பொதுச்செயலாளராக இருந்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். 98 வயதான அவர் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அன்பழகன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதற்காக மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

Latest Videos

undefined

இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்பழகன் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தனர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்ததும் திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்தார்.

செல்போன் பேசி தண்டவாளத்தை கடந்த பெண்..! ரயில்மோதி உடல் துண்டு துண்டான பரிதாபம்..!

தொடர்ந்து 10 நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அன்பழகன் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அன்பழகன் இருப்பதை அறிந்து திமுகவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அன்பழகன் உடல்நிலை குறித்து அவ்வப்போது விசாரித்து வரும் ஸ்டாலின், நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை பார்த்தார்.  வயது மூப்பு காரணமாகவே அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!

click me!