அடுத்த மாதம் முதல் பராக் பராக்... ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சிக்கு இப்படியொரு பெயரா..?

By Thiraviaraj RMFirst Published Mar 4, 2020, 12:38 PM IST
Highlights

அரசியல் கட்சி பெயரை அறிவிப்பதற்கான முதற்கட்ட பணிளை, ரஜினி துவக்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக ரஜினி தனது மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

அரசியல் கட்சி பெயரை அறிவிப்பதற்கான முதற்கட்ட பணிளை, ரஜினி துவக்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக ரஜினி தனது மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி, அவர் ஆலோசிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சி அறிவிப்புக்கான செயல்பாடுகள் வேகம் எடுக்கும் என, தெரிகிறது.

அரசியலுக்கு வருவதற்கு முன்பே இப்படி முன்னுக்குப் பின் முரணாக ரஜினி செயல்படுவதால், எப்போதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில், ரஜினி வரும் ஏப்ரல்14 புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி தொடங்கப் போவதாகவும், ஆகஸ்டில் மாநாடு நடத்தப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், நாளை காலை 10 மணிக்குச் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய கட்சியின் கொடி, பெயர், சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா, கூட்டணி சேருவதா போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்படுகின்றன. 

கட்சிப்பெயரும் தமிழர் தேசிய கட்சி எனச் சூட்டப்பட்டுள்ளது. தனது கட்சிப்பெயரில் தமிழும் இருக்க வேண்டும். தேசியமும் இருக்க வேண்டும் என விரும்பி தனது கட்சிக்கு இந்தப்பெயரை அவர் சூட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகையால் இந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியினரை தனித்து 234 தொகுதிகளிலும் களமிறக்க ரஜினிகாந்த் முடிவெடுத்து விட்டார். ஆகஸ்டு மாதம் கட்சியை தலைவர் அறிவித்து விடுவார் என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.   

click me!