திடீர் உடல்நலக்குறைவு..! அப்பல்லோவில் எப்படி இருக்கிறார் அன்பழகன்..?

Published : Feb 25, 2020, 10:23 AM ISTUpdated : Feb 25, 2020, 10:27 AM IST
திடீர் உடல்நலக்குறைவு..! அப்பல்லோவில் எப்படி இருக்கிறார் அன்பழகன்..?

சுருக்கம்

நேற்று இரவு 8 மணியளவில் அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்பழகன் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தனர்.

திமுக பொதுச்செயலாளராக இருந்து வருபவர் க.அன்பழகன். 98 வயதான அவர் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அன்பழகன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதற்காக மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்பழகன் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தனர். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்ததும் திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு விரைந்தார். 

அங்கு அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்தார். தகவலறிந்து திமுக முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!