கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நடைபெற இருந்த பொதுக்குழு தள்ளிவைக்கப்படுவதாக திமுக தலைமை தெரிவித்திருக்கிறது. பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்பட இருந்த நிலையில், கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் திமுக தலைவர் ஸ்டாலின் ஒத்தி வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் கொரோனா பாதிற்பிற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை மார்ச் 31 ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கிப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்தநிலையில் வருகிற 29ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது.
தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நடைபெற இருந்த பொதுக்குழு தள்ளிவைக்கப்படுவதாக திமுக தலைமை தெரிவித்திருக்கிறது. பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்பட இருந்த நிலையில், கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் திமுக தலைவர் ஸ்டாலின் ஒத்தி வைத்துள்ளார். முன்னதாக எல்லையோர மாவட்டங்களில் நடைபெற இருந்த திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் மார்ச் 31 ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அக்கட்சி சார்பாக நேற்று அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.