நடைபயிற்சிக்கு சென்ற திமுக நிர்வாகி.. ஓட ஓட வெட்டிப் படுகொலை.. பட்ட பகலில் வெறிச் செயல்.

Published : Apr 28, 2022, 01:02 PM IST
நடைபயிற்சிக்கு சென்ற திமுக நிர்வாகி.. ஓட ஓட வெட்டிப் படுகொலை.. பட்ட பகலில் வெறிச் செயல்.

சுருக்கம்

நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த திமுக நிர்வாகி அவரது உறவினர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை  நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 

நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த திமுக நிர்வாகி அவரது உறவினர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை  நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருப்பது  அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக எதிர்க்கட்சிகளான பாஜக-அதிமுக குற்றம்சாட்டி வருகின்றன. கூலிப்படை கொலைகள், பழிவாங்கும் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் சேலம் கொங்கணாபுரம் பகுதியில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற திமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  சேலம் கொங்கணாபுரம் கண்ணியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தன்.

இவர் திமுகவின் சேலம் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வந்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு கன்னியாம் பட்டி சாலையில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருவர் இருசக்கர வாகனத்தில் வேகதாக கந்தனை நோக்கி வந்தனர். அவர்கள் கந்தனைக் கீழே தள்ளி தாக்கினர். அப்போது கந்தன் அவர்களிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஒடினார் ஆனால் அவர்களை விடாமலை விரட்டிச் சென்று, தங்கள் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். கந்தன் ரத்தவெள்ளத்தில் அலறினார். ஆனால் சுற்றிலும் யாரும் இல்லாததால் அவர்கள் கந்தனை  தாக்கிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

இதனையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதாவது கந்தனை கொலை செய்தவர்கள் அவரது உறவினர்களான மணிகண்டன் மற்றும் சின்னப்பையன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டன் மற்றும் சின்ன பையனை போலீசார் தேடி வருகின்றனர். 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு
எடப்பாடிக்கு நன்றி சொன்ன புதிய பிஜேபி தலைவர்..! எகிரும், அதிமுக மவுசு