திமுக தேர்தல் அறிக்கை.. நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே சட்டம்...

By Ezhilarasan BabuFirst Published Mar 13, 2021, 1:38 PM IST
Highlights

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்படி முறையாக பட்டம் பெற்று வேலையின்றி காத்திருக்கும் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவர்
.  

திமுக தேர்தல் வாக்குறுதி.. நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே சட்டம்... ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடத்தபடும் என்றும், நடந்த தேர்தலை கலைக்கமாட்டோம் எனவும் , உள்ளாட்சி தேர்தல் நடக்காத இடங்களில் மீண்டும் நடத்துவோம் எனவும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முழு விவரம். 

ஸ்டாலின் பேசியதாவது: 

திமுக தேர்தல் அறிக்கை என்றால் தேர்தல் கதாநாயகன் என்று கூறுவார்கள். நேற்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன், இப்போது தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன். தேர்தல் அறிக்கை என்றால் கட்சியின் விருப்பமாக இல்லாமால், மக்களின் விருப்பமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் குழுவாக தமிழம் முழுவதும் சென்று தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறார்கள்.
 எனவே அறிக்கை தயாரித்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள். 500 மேற்பட்ட அறிவிப்பு வாக்குறுதியாக இடம்பெற்றுள்ளன. 

முக்கிய வாக்குறுதிகள்:  

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

*அதிமுக அமைச்சர்களின் ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

*அனைத்து சம தொகுதிகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் அமைக்கப்படும். 

*பெட்ரோல் விலை 5 ரூபாய், என்றும், டீசல் 4 ரூபாயும் குறைக்கப்படும்.

*சமையல் எரிவாயு மீது 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்.  

*மாதம் ஒரு கிலோ சக்கரை அளிக்கப்ப்டும், நியாய விலை கடைகளில் மீண்டும் உளுத்தம் பருப்பு வழங்கப்படும். 

*தேவாலயங்கள் மசூதிகளை சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 

*ஏழை எளிய மக்களுக்காக முதல் கட்டமாக 500 கலைஞர்  உணவகம் அமைக்கப்படும். 

*பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும். 

*மகளிருக்கு பேறுகால உதவி தொகை 24 அயிரம் உயர்த்தப்படும்.

*நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே சட்டம் இயற்றப்படும். 

*புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். 

*வேலையில்ல பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க 20000 கடன் வழங்கப்படும்.

*மாணவர்களுக்கு இலவச டேப் வழங்கப்படும். 

*ஜெயலலிதா மரண விசாரணை ஆணைய அறிக்கையை விரைந்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  

*8 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கப்படும்.  

*வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும்

*மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும், 

*மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்படும்

*திருச்சி, மதுரை கோவை - மெட்ரோ ரயில் அமைக்கப்படும். 

*அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவாக காலையில் பால் வழங்கப்படும்.

*மீனவர்களுக்கு 2லட்ச்ம் வீடுகள் கட்டித்தரப்படும். 

*மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்.  

*புகழ் பெற்ற இந்து கோவில்களுக்கு சென்று வர ஒரு லட்சம் பேருக்கு 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். 

*மகளீருக்கு இலவச உள்ளூர் பேருந்து வசதி செய்து தரப்படும்.

*பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்.

*தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்படாது. 

*நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ஆக உயர்த்தப்படும். 

*திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம். 

*திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தப்படும். 

* கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 

*மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். 

*இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை மத்திய அரசு வலியுறுத்த நிர்பந்திக்கப்படும். 

*பொங்கல் பண்டிகை தமிழர் தேசிய திருநாளாகக் கொண்டாடப்படும்.  

*தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் நிறைவேற்றப்படும்.  

*அரசு பணியில் உள்ள மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும். 

*விவசாயிகள் புதிய மோட்டார் வாங்க பத்தாயிரம் மானியம் வழங்கப்படும். 

*தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். 

*ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 

*ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். 

*இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்படி முறையாக பட்டம் பெற்று வேலையின்றி காத்திருக்கும் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவர். 

*முதியோர் உதவி தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும். இவ்வாறு வாக்குறிகள் அளிக்கப்பட்டுள்ளது. 
 

click me!