திருட்டு தனமாக இயங்கி வந்த திமுக துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு சீல்... அதிகாரிகள் அதிரடி..!

By vinoth kumarFirst Published Mar 2, 2020, 2:53 PM IST
Highlights

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர் உள்பட பல மாவட்டங்களில் ராட்சத மோட்டார் வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி கேன் குடிநீர் விற்பனை செய்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500 அடிக்கும் கீழே சென்று விட்டது.

வேலூரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையின் நீர் உறிஞ்சும் பம்புக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர் உள்பட பல மாவட்டங்களில் ராட்சத மோட்டார் வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி கேன் குடிநீர் விற்பனை செய்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500 அடிக்கும் கீழே சென்று விட்டது.

நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை தடுக்க தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சட்டவிரோதமாக அனுமதி இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் இதுவரை 300-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க;- திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்து கவலைக்கிடம்... அப்பல்லோ மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்..!

இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் கிரமாத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை உள்ளது. இந்த ஆலை அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி பொதுப்பணித் துறையினர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் இன்று சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் காட்பாடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!