பாரத் பந்த் தோல்வி.. திமுகவின் இரட்டை வேடம் மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமானது.. எல்.முருகன் விளாசல்..!

By vinoth kumarFirst Published Dec 8, 2020, 4:08 PM IST
Highlights

வேளாண் சட்டத்தால் பாஜகவுக்கு நல்லபெயர் கிடைக்க கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியள்ளார். 

வேளாண் சட்டத்தால் பாஜகவுக்கு நல்லபெயர் கிடைக்க கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியள்ளார். 

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் 13வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பல இடங்களில் விவசாய சங்கத்தினர், எதிர்க்கட்சியினர் ஆர்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன் புதிய சட்டங்களால் அதிக அளவிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யலாம். விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட வேளாண் சட்டங்கள் வழிவகை செய்கிறது. மோடி விவசாயிகளின் நண்பன் என்ற பிரச்சார இயக்கம் தொடங்க உள்ளோம். இந்த திட்டத்தில் பாஜகவினர் கிராமம் கிராமமாக சென்று விசவாயிகளை சந்தித்து மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட உள்ளது. 

2010ம் ஆண்டு தற்போதைய வேளாண் சட்டத்திருத்த மசோதாவில் உள்ள திட்டத்தை அப்போதைய மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் மற்றம் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தார்கள். ஆனால், தற்போது  வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதேபோல், தமிழகத்தில் பாரத் பந்த் தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் திமுகவினர், வணிகர்களை மிரட்டி கடைகளை மூட வலியுறுத்தியுள்ளனர். வேளாண் சட்டத்தால் பாஜகவுக்கு நல்லபெயர் கிடைக்க கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

ரஜினி ஜனநாயக முறைப்படி கட்சி துவங்க உள்ளார். ரஜினி தனது சொந்த விருப்பப்படி கட்சி துவங்க உள்ள நிலையில் அவர் பாஜக கட்சியின் பி டீம் என எப்படி சொல்ல முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!