அனிதாவின் மரணத்தில் அரசியல் செய்தது திமுக... ஆத்திரம் தீராத அண்ணாமலை..!

By Thiraviaraj RMFirst Published Jan 30, 2022, 5:29 PM IST
Highlights

பிஞ்சு குழந்தையின் மரணத்தை வைத்து பாஜக எப்போதும் அரசியல் ஆதாயம் தேடாது. மாணவியின் தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்.

மாணவியின் மரணத்தை வைத்து பாஜக எப்போதும் அரசியல் ஆதாயம் தேடாது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் தங்கி படித்து வந்த லாவண்யா அங்கு பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. 
ஆனால் இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.  
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவியின் வீட்டிற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மாநில மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் லாவண்யாவின் படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினர்.  இதனையடுத்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும். பாஜகவின் போரட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. நீதி வேண்டும், நியாயம் வேண்டும். சகோதரி லாவண்யாவிற்கு நீதி கேட்டு போராட்டம். இதில், மனிதர்கள் தவறு செய்துள்ளனர். பிஞ்சு குழந்தையின் மரணத்தை வைத்து பாஜக எப்போதும் அரசியல் ஆதாயம் தேடாது. மாணவியின் தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். 

மாணவியின் வீடியோவை அடிப்படையாக வைத்து பாஜக குரல் கொடுத்து வருகிறது. வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பாஜக போராடுகிறது. ஆட்சியாளர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் பேசுவதால் நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது. இறக்கும் தருவாயில் எந்த ஒரு குழந்தையும் பொய் சொல்ல வாய்ப்பில்லை. ஒரு மதத்தை சேர்ந்த 2 மனிதர்கள் செய்த தவறு தான் இது. இதில், புலனாய்வுத் துறை தவறான அறிக்கையை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர். 

ஆதாரமின்றி அனிதாவை வைத்து அரசியல் செய்தது திமுக, ஆனால் நாங்கள் தஞ்சை மாணவிக்கு ஆதாரத்துடன் தான் நீதி கேட்கிறோம். அனிதாவிற்கு ஒரு நியாயமா? தஞ்சை மாணவிக்கு ஒரு நியாயமா?  தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கிடைக்குமா என சந்தேகம் ஏற்படுகிறது. மாணவி தற்கொலை விவகாரத்தை தமிழக அரசு மோசமாக கையாளுகிறது” என்று அவர் தெரிவித்தார். 

click me!