பூரண மதுவிலக்குனு நாங்க எப்போ வாக்குறுதி கொடுத்தோம்? அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு கருத்து!!

By Narendran S  |  First Published Feb 15, 2023, 9:39 PM IST

2021 தேர்தல் வாக்குறுதியில் மது கடைகள் குறித்து எந்த வித வாக்குறுதியும் திமுக கொடுக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


2021 தேர்தல் வாக்குறுதியில் மது கடைகள் குறித்து எந்த வித வாக்குறுதியும் திமுக கொடுக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு அமைந்த பிறகு மதுக்கடைகள் அமைக்கப்பட்டது போலவும் புதிதாக கொள்கைகளை கொண்டு வந்தது போலவும் சில பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் சில காலை நாளிதழ்கள் விரும்பத்தகாத செய்திகளை வெளியிடுகின்றனர். ஒரு அரசின் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது என்பது அரசியல் கருத்துக்களாக இருக்கலாம். ஆனால் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் அரசின் மீது அவதூறு செய்திகளை உண்மைக்கு மாறான செய்திகளை பரப்புவது என்பது ஏற்புடையதல்ல.

இதையும் படிங்க: இப்படித்தான் இருக்கு 21 மாத திராவிட மாடல் ஆட்சி.? ஓபிஎஸ் கொடுத்த திடீர் ட்விஸ்ட் - அதிர்ச்சியில் திமுக !!

Tap to resize

Latest Videos

2021 தேர்தல் வாக்குறுதியில் மது கடைகள் குறித்து எந்த வித வாக்குறுதியும் திமுக கொடுக்கவில்லை. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் மதுக்கடைகள் குறைவாக உள்ளன. அதிமுகவினர் தோல்வியின் விரத்தியில் பேசுகிறார்கள், அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்கு அல்ல. ஒரு டாஸ்மாக் கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர் பணியாளர் பாட்டிலுக்கு அதிகமாக விற்றால் புகாருக்கு நடவடிக்கை எடுத்து அவர்கள் தற்காலிக பணி இடை நீக்கம் செய்து உத்தரவு இடுகிறோம்.

இதையும் படிங்க: பரோட்டா போடுவதும், வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா.? எடப்பாடி பழனிசாமி அதிரடி !

அப்படி செய்யும் பொழுது தொழிற்சங்கத்தின் போர்வையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்கின்றனர். ஏன் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை யாரும் கேட்பதில்லை. அந்த செய்தியையும் அப்படியே வெளியிடுகின்றனர். 2021 இல் இருந்த மது கடைகளில் ஏறத்தாழ 88 கடைகள் குறைக்கப்பட்டுள்ளது. கோயில் பள்ளி கல்லூரி அருகே இருக்கக்கூடிய கடைகள் எல்லாம் கணக்கெடுக்கப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எங்கே எல்லாம் ஆட்சேபனை தெரிவிக்கின்றார்களோ ஆய்வு செய்யப்பட்டு அதுவும் குறைக்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார். 

click me!