Erode East Election : பரோட்டா போடுவதும், வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா.? எடப்பாடி பழனிசாமி அதிரடி !

By Raghupati R  |  First Published Feb 15, 2023, 8:22 PM IST

ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற நிலை வந்துவிட்டதால் அமைச்சர்கள் வீதி வீதியாக சுற்றுகின்றனர். எந்த அமைச்சராவது ஒரு திட்டத்தை கொண்டுவந்து இருக்கிறார்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

அத்துடன் தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கில் பிரதான அரசியல் கட்சிகள் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக. ஆனால் மேலும் 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..இப்படித்தான் இருக்கு 21 மாத திராவிட மாடல் ஆட்சி.? ஓபிஎஸ் கொடுத்த திடீர் ட்விஸ்ட் - அதிர்ச்சியில் திமுக !!

அனைத்து கட்சிகளும் ஈரோடு கிழக்கில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இன்று அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் உள்ள வீரப்பம்பாளையத்தில் பிரச்சாரம் செய்தார்.

அவர் பிரச்சாரத்தில் பேசிய போது, அதிமுகவை எதிர்க்க திமுகவிடம் சக்தி கிடையாது. அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது. 21 மாத கால ஆட்சியில் திமுக அரசு எதுவும் செய்யவில்லை. இன்று கூட நான் வரும் போது பார்த்தேன். மக்களை ஆடு மாடுகளை அடைத்து வைத்திருப்பது போல் முதல்வர் ஸ்டாலினுக்காக சேலத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற நிலை வந்துவிட்டதால் அமைச்சர்கள் வீதி வீதியாக சுற்றுகின்றனர். எந்த அமைச்சராவது ஒரு திட்டத்தை கொண்டுவந்து இருக்கிறார்களா ? பரோட்டா போடுவதுதான் அமைச்சரின் வேலையா ? மக்களுக்கு நன்மை செய்யாமல் அமைச்சர் பரோட்டா போடுவதும் வடை போடுவதும்தான் வேலையா ? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2 வேளை பிரியாணி கொடுக்கிறார்கள் சாப்பிடுங்க. மக்கள் நிம்மதியா இருங்க. ஓட்டு மட்டும் எங்களுக்கு போட்டுருங்க.  ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்வதற்கு நான்கு வழிச்சாலை, பள்ளிப்பாளையம் - ஈரோடு இணைக்க பாலம்  ஆகியவை அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு அமைச்சரும் ஒரு திட்டத்தை கொண்டு வந்திருந்தால் கூட ஈரோடு மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கும். கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காக கொட்டகை அமைத்து திமுக அமைச்சர்கள் மக்களை அடைத்து  வைத்துள்ளனர். கலைஞருக்கு பேனா சிலை வைப்பதற்கு பதில் முதியோருக்கு உதவித்தொகையை வழங்கலாம் என்று பிரச்சாரம் செய்தார் எடப்பாடி பழனிசாமி.

இதையும் படிங்க..25 மாத திமுக ஆட்சி.? எடப்பாடி அலை வீசுது.! துணிவுடன் தேர்தலை சந்திக்கும் அதிமுக - ‘கலகல’ செல்லூர் ராஜு

click me!