எடப்பாடியார், பன்னீரை ‘ரெண்டு குமாஸ்தாக்கள்’ என்று கிண்டலடித்த தி.மு.க. புள்ளி: ஆவேசம் காட்டாத ஆளுங்கட்சி

By Vishnu PriyaFirst Published Feb 3, 2020, 7:26 PM IST
Highlights

“இப்ப அங்குட்டு (அ.தி.மு.க.) போயிட்டு குடும்ப ஆட்சி, குடும்ப ஆட்சின்னு சொல்றீகளே! அஞ்சு வருஷம் தி.மு.க. எம்.எல்.ஏ.வாயிருந்து ஐநூறு கோடி ரூபாய் சொத்து சம்பாதிச்சப்பவே இதை தட்டி கேட்டிருக்க வேண்டியதுதானே? 

தென் தமிழக அ.தி.மு.க.வில் மிக முக்கிய தலையாக இருந்தவர் கருப்பசாமி பாண்டியன்!  அவரை ‘கானா’ என்றுதான் அழைப்பார்கள் திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க.வினர். கடந்த இருபது வருடங்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இங்கே சில காலம், அங்கே சில காலம் என சர்க்கஸ் ஆடிவிட்டார் கானா. இதனால் அவரது கெத்து இமேஜானது  பெரிதாய் டேமேஜாகிவிட்டது. 
இங்குட்டும் அங்குட்டுமாய் அலை பாய்ந்தவர் சமீபத்தில் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறார். அப்படி இணைந்தவர்  சும்மா இல்லாமல் தனது பழைய தலைமையான கருணாநிதியின் குடும்பத்தை ஓவராக உரசிப் பேசிவிட்டார்.

 

அதிலும் ஸ்டாலினை வகையாய் வம்புக்கு இழுத்துவிட்டார். இதைக் கேட்டு செமத்தியாய் டென்ஷாகிவிட்டார் அதே திருநெல்வேலி மாவட்டத்தின் தி.மு.க. முக்கிய புள்ளியும், மாஜி எம்.எல்.ஏ.வுமான மாலை ராஜா. அவர் வெளியிட்டிருக்கும்  வாட்ஸ் அப் ஆடியோவில் கானாவுக்கு ஆப்பு வைத்துள்ளார் இப்படி....“இப்ப அங்குட்டு (அ.தி.மு.க.) போயிட்டு குடும்ப ஆட்சி, குடும்ப ஆட்சின்னு சொல்றீகளே! அஞ்சு வருஷம் தி.மு.க. எம்.எல்.ஏ.வாயிருந்து ஐநூறு கோடி ரூபாய் சொத்து சம்பாதிச்சப்பவே இதை தட்டி கேட்டிருக்க வேண்டியதுதானே? உங்களை அறுபது லட்சம் ரூபாய் காரில்  உலா வர வைத்தது தி.மு.க.தானே! அப்ப தெரியலையோ இது குடும்ப கட்சின்னு?சொந்த ஊரான திருத்து மற்றும் குற்றாலத்தில் அரண்மனை எப்படி வந்துச்சு அண்ணாச்சி உங்களுக்கு?தி.மு.க.வில் கட்சி ரீதியாக மாவட்டங்களை பிரிச்சப்ப, உங்களோ பதவி பறிபோயிடுமுன்னு பயந்து ‘கலெக்டராயிருந்துவிட்டு, தாசில்தாரராக போக முடியாது!’ன்னு சொன்ன ஆள் நீங்க. 

 

ஆனா இன்னைக்கு அ.தி.மு.க.வில் இரண்டு குமாஸ்தாக்களிடம் அடிமையாக போக வேண்டிய காரணம் என்ன? 
வயசான, கடைசி காலத்திலும் கேவலம் பணத்துக்காக அ.தி.மு.க.வுக்கு போயிருக்கிறீர்! தி.மு.க.வால் வாழ்ந்த உனக்கு என் தலைவன் குடும்பத்தைப் பற்றி பேச அருகதை இல்லை.” என்று சீறியிருக்கிறார். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்களாகவும், தமிழகத்தின் முதல்வர்களாகவும் வலம் வரும் ‘ இ.பி.எஸ்! & ஓ.பி.எஸ்!’ இருவரையும் பார்த்து மாஜி தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரி இப்படி குமாஸ்தா என்று மோசமாக குறிப்பிட்டு விமர்சித்திருப்பதற்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க.விலிருந்து பெரும் கண்டனம் எழாமல் இருப்பதால் கடுப்பாகி இருக்கிறாராம் கானா!ஆனா!லும் உங்க சர்க்கஸ் ரொம்ப ஓவர்தான் கானா  சார்வாள்!

click me!