காடுவெட்டியார் இருந்தா இப்படி அடங்கியிருக்க மாட்டோம்! இது பழைய பா.ம.க. இல்லை!: ராமதாஸை ரத்தம் கொதிக்க வைக்கு உட்கட்சி கலகம்!

By Vishnu PriyaFirst Published Feb 3, 2020, 7:22 PM IST
Highlights

ஜெயலலிதா மறைந்த பின்னான எடப்பாடியார், பன்னீர்செல்வம்  தலைமையிலான அ.தி.மு.க.வை தாறுமாறாக விமர்சித்துக் கொட்டியது யார்? என்று கேட்டால், யோசனையே இல்லாமல் பதில் சொல்லலாம் அது ’பாட்டாளி மக்கள் கட்சிதான்!’ என்று. அந்தளவுக்கு அ.தி.மு.க.வை மிக வன்மமாக வைத்து செய்தது பா.ம.க. 
 

ஜெயலலிதா மறைந்த பின்னான எடப்பாடியார், பன்னீர்செல்வம்  தலைமையிலான அ.தி.மு.க.வை தாறுமாறாக விமர்சித்துக் கொட்டியது யார்? என்று கேட்டால், யோசனையே இல்லாமல் பதில் சொல்லலாம் அது ’பாட்டாளி மக்கள் கட்சிதான்!’ என்று. அந்தளவுக்கு அ.தி.மு.க.வை மிக வன்மமாக வைத்து செய்தது பா.ம.க. 

ஆனால் அதே அ.தி.மு.க.வுடன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தபின், அந்த பழைய விமர்சனத்துக்கான பலனை மிக மோசமாக அறுவடை செய்தது ராமதாஸின் கட்சி. அதிலும் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வாங்கிய பிறகு உட்கட்சியினரே பா.ம.க.வின் தலைமையை மிக கடுமையாக விமர்சித்தனர். ‘பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. அடிமைப்பட்டது போல, நாம் அ.தி.மு.க.விடம் அடிமைப்பட்டுவிட்டோமா?’என்று உட்கட்சிக்குள் எரிமலை வெடித்தது. 

இதனால் புது ரூட் பிடித்தார் ராஜ்யசபா எம்.பி.யான அன்புமணி. அதன் ஒரு கோணமாகத்தான் ‘2021 சட்டசபை தேர்தலில் பா.ம.க. ஆட்சியமைக்கும், உடனே பூரண மதுவிலக்கை அமல்ப்படுத்துவோம்!’ என்றார். கூட்டணிக்குள் இருந்து கொண்டு அன்பு கொடுத்த இந்த குடைச்சலானது ஆளுங்கட்சியை பெரிதாய் அப்செட்டாக்கியது. 

இந்த ரணம் ஆறுவதற்குள், பா.ம.க.வின் நிறுவனரான ராமதாஸோ ‘5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்போகிறது பா.ம.க.’ என்று அறிவித்தார். இதைக்கேட்டு பெரிய குஷியாகினர் அக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும். ஏனென்றால் அ.தி.மு.க.வுக்கு நாங்கள் அடிமைகளில்லை! என்பதை நிரூபிக்க தருணம் வந்துவிட்டதாக மார்தட்டினர். ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ராமதாஸிடம் ‘உங்கள் கோரிக்கையை நிச்சயம் பரிசீலிக்கிறோம்!’ என்று போனில் சொன்னதை குறிப்பிட்டு, போராட்டத்தை ரத்து செய்தார் ராமதாஸ். இதில் கடும் கடுப்பாகிவிட்டனர் பா.ம.க.வினர். 

”அக்கிரமமான ஒரு திட்டத்தை அறிவித்த ஆளுங்கட்சிக்கு எதிராக வீரமாக மருத்துவர் அய்யா (ராமதாஸேதான்) போராட்டம் அறிவிச்சதும், பழைய கெத்தை அவர்கிட்டே பார்த்தோம். ஆனால் அமைச்சர் சொன்னதற்காக இப்படி சமரசமானது அசிங்கம். இது பழைய பா.ம.க. இல்லை! காடுவெட்டி இருந்தால் இப்படி கைகட்டி நிற்காது பா.ம.க.  இப்ப தி.மு.க. காரன் நம்மை பார்த்து ‘கூட்டணிக்குள்ளே இருந்துக்கிட்டே போராட்டம் நடத்துற ஸீனை போட்டு, ஆளுங்கட்சிட்ட பெரிய சூட்கேஸ் வாங்கிட்டு, பல்டி அடிச்சுட்டீங்க போல!’ன்னு கேவலமா பேசுறான்.” என்று பொங்கினர். 

இந்த ‘போராட்ட ரத்து அறிவிப்பு’ மூலம் பா.ம.க. கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் இது பற்றி விளக்கம் தரும் அக்கட்சியின் தலைவரான ஜி.கே.மணி “பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மருத்துவர் அய்யாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அத்தேர்வு முடிவின் அடிப்படையில்  மாணவர் தேர்ச்சியினை முதல் 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம்! என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும், இதுகுறித்து அரசாணையிலேயே இருப்பதாகவும் சொன்னார். இன்னும் பல விஷயங்களை தெளிவாக கூறினார். குறிப்பாக எங்கள் நிறுவனர் குறிப்பிட்டது போலவே அமைச்சரும் ‘5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும்’ என்றும் உறுதியளித்தார். இதை அடுத்துத்தான் போராட்டம் கைவிடப்பட்டது. 

நரம்பில்லா நாக்குகள் சில வன்மமாக இதை விமர்சிப்பது தெரியும். ஆனால் நாங்கள் மக்களோடு நிற்கிறோம் எப்போதும்!” என்று முடித்திருக்கிறார். 
போதுமாய்யா விளக்கம்!

click me!