தி.மு.க. மெல்ல மெல்ல முஸ்லிம் லீக்காக மாறுது பார்!: ஸ்டாலினை கலாய்த்துக் கொட்டிய ஹெச்.ராஜா

By Vishnu PriyaFirst Published Feb 3, 2020, 7:18 PM IST
Highlights

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நமது பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் எதிரி. இந்து மதத்துக்கு எதிராக யுத்தம் நடக்கிறது. தி.மு.க. முஸ்லிம் லீக்காக மாறிக் கொண்டிருக்கிறது. இந்து  மதத்தின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை யாரேனும் கொச்சைப்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்! -ஹெச்.ராஜா (பா.ஜ.க. தேசிய செயலாளர்)

*பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய காவல் பல்கலை, தேசிய தடய அறிவியல் பல்கலையை தமிழகத்தில் துவக்க வேண்டும். மேலும், புதிதாக அமைக்கப்பட உள்ள, நூறு விமான நிலைய திட்டத்தில், நெய்வேலி, ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையங்களை அமைக்க வேண்டும். தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேணுட்ம். 
-எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

*மத்திய அரசு அதிகாரிகளுக்கு அல்வா கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட், மக்களுக்கும் ’அல்வா’ உடன் முடிவடைந்துள்ளது. நீண்ட உரை, சரியான தீர்வுகள்தான் இல்லை. இதை தேச வளர்ச்சிக்கான, மக்கள் நலனுக்கான பட்ஜெட்டாக கருத முடியாது. 
-கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம் தலைவர்)

*சுவாமி விவேகானந்தரின் புகழ், உலகமெங்கும் தெரிய காரணமாக இருந்தவர் ராமநாதபுரத்து மன்னர் பாஸ்கர சேதுபதி. எனவே விவேகானந்தர் பெருமை பேசும் மையங்களில், மன்னர் சேதுபதியின் படங்களும் இடம்பெற பிரதமர் மோடி முன்வர வேண்டும். 
-வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)

*தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. மாநிலத்தில் எங்கு தவறு நடந்தாலும், முதல்வர் தன் இரும்புக் கரத்தால் தட்டிக் கேட்கிறார். நாட்டின் சொத்தாகிய இளைஞர்களை திசை திருப்பிட சில சக்திகள் செயல்படுகின்றன. அவற்றை நம்பிட வேண்டாம் யாரும். 
-ஆர்.பி.உதயகுமார் (வருவாய்த்துறை அமைச்சர்)

*பொறியியல் இஞ்சினியர்கள் குறைந்தது மூன்றாண்டுகள் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அவர்கள் பணியாற்றும் போது, உள்ளாட்சி அமைப்புகள் சம்பளம் வழங்குமா? அல்லது யார் வழங்குவார்கள்? என்ற விளக்கம் பட்ஜெட்டில் இல்லை. -டி.ஆர்.பாலு (தி.மு.க. எம்.பி.)

*பார்லிமெண்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட், வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும். அதேநேரம் எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பது எனும் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. 
-சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்)

*பா.ஜ.க.வின் பாதத்தை அ.தி.மு.க. தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபனை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் வைத்து, நாட்டை வன்முறை பாதைக்கு மாற்ற, ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. அரசியல் அமைப்பு சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்தவர், கண்ணுக்கு முன் மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மத ரீதியாக தூண்டுகிறார். ராஜேந்திர பாலாஜியை கவர்னர் பதவி நீக்கம் செய்வதோடு, சட்ட ரீதியான நடவடிக்கையை அவர் மீது எடுக்க வேண்டும். 
-மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டமானது வசந்தகுமார் எம்.பி., தேசிய செயலர் சஞ்சய் தத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, வசந்தகுமாரை உரசி பேசிய மீனவரணி தலைவர் விபினை காங்கிரஸ் கட்சியினர் மிக கடுமையாக தாக்கி, வேட்டி சட்டையை கிழித்தனர். ரத்த காயமும் உருவானது. 
- பத்திரிக்கை செய்தி. 

*தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நமது பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் எதிரி. இந்து மதத்துக்கு எதிராக யுத்தம் நடக்கிறது. தி.மு.க. முஸ்லிம் லீக்காக மாறிக் கொண்டிருக்கிறது. இந்து  மதத்தின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை யாரேனும் கொச்சைப்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்! - ஹெச்.ராஜா (பா.ஜ.க. தேசிய செயலாளர்)

 

 

click me!