இபிஎஸ் களத்துக்கே வருவதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை..! அதிமுக பதிலடி..!

Published : Oct 23, 2025, 03:48 PM IST
eps

சுருக்கம்

விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகள் பிரச்னை என்பதால் களத்துக்கு எடப்பாடியார் வருகிறார், அதை திமுக அரசால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை” என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்  குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ் சென்னை அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தஞ்சை திருவாரூரில் ஆய்வு மேற்கொண்டபோது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லோடு மேனைப் பார்த்து எவ்வளவு கொள்முதல் செய்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு லோடு மேன் 800 முதல் 900 மூட்டை ஒருநாளைக்கு கொள்முதல் செய்கிறோம் என்கிறார். சட்டமன்றத்தில் செப்டம்பர்17ம் தேதி செறிவூட்டப்பட்ட அரிசிக்கு அனுமதி வரவில்லை என்கிறார். ஆனால் ஆகஸ்ட் 18ம் தேதியே அனுமதி வந்துவிட்டது.

தஞ்சை வடூரில் அண்ணனை விவசாயப் பிரதிநிதிகள் சந்தித்து பேசினார்கள். திடீரென மழை பெய்கிறது, அந்த தண்ணீரில் நெல் அடித்துக்கொண்டு ஓடுகிறது, எதுவும் செய்யமுடியவில்லை. கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச்செல்லவில்லை. ஒவ்வொரு சென்டருக்கும் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மூட்டை நெல் தேங்கி இருக்கிறது. 30 லட்சம் மூட்டைக்கு மேலே சென்டரில் இருந்து பர்சேஸ் செய்ய முடியாமல் இருக்கிறது. கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச்சென்றால் தான் மேற்கொண்டு கொள்முதல் செய்ய முடியும். இந்த இரண்டு வேலையும் நடக்கவில்லை.

ஒரு லட்சம் ஏக்கரில் அறுவடை ஆகாமல் இருக்கிறது. அறுவடை செய்து கொட்டிவைக்க வழியில்லை என்பதால் வயலிலே விட்டுவிட்டனர். அந்த நெல் கீழே படிந்துவிடுகிறது. மழை பெய்ததால் முளைத்துவிட்டது, அந்த நெல் இனி தேறாது. இந்த மாதிரி ஒரு லட்சம் ஏக்கர் இருக்கிறது. கொள்முதலுக்கான ஈரப்பதம் 17% இருந்து 22% ஆக உயர்த்தி மத்திய அரசிடம் ரிலாக்சேஷன் வாங்கி இருக்க வேண்டும். ஆனால் அரசு செய்யவில்லை.

அண்ணன் வந்த பின்னர் தான் அமைச்சர்கள் எல்லாம் ஓடிவருகிறார்கள். பொதுவாக மயிலாடுதுறையில் முன்கூட்டியே கொள்முதல் முடிந்துவிடும். அதனால் அங்கு மட்டும் சென்று அமைச்சர் பார்வையிட்டார். திருவாரூரில் எங்குமே அமைச்சரால் போக முடியவில்லை. எடப்பாடியார் பொய் சொல்வதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள். நான்கு ஆண்டுகள் இரண்டு மாதம் கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவுக்கு ஆட்சியைக் கொடுத்தவர். விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்தவர், இன்சூரன்ஸ் வாங்கிக் கொடுத்தவர், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவர். அவருக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது?

அதிமுகவின் 10 ஆண்டு காலத்தில் நெல் கொள்முதலில் இப்படியான குளறுபடிகள் இருந்ததில்லை. ஏ டூ இசட் ரெக்கார்டில் உள்ளது. நான் ஒன்பதரை ஆண்டுகள் உணவுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஆறேழு பொது மேலாளர்கள் இருப்பார்கள், அவர்கள் எல்லாமே டி.ஆர்.ஓ ரேங்க். அவர்களை 2 மாதங்களுக்கு முன்னரே அந்தந்த மாவட்டத்துக்கு அனுப்பிவிடுவோம். கொள்முதல் செய்வதற்கு சாக்கு எவ்வளவு தேவை, எவ்வளவு விளைச்சல் இருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்வார்கள்.

விவசாயிகள், உணவுத்துறை மற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் அடங்கிய முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவோம். என்ன செய்யலாம் என்று விவசாயப் பிரதிநிதிகளிடம் கேட்போம். அதுபோன்று இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. சாக்கு, சணல் 6 மாதம் முன்பே பர்சேஸ் செய்யும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இன்றைக்கு எதுவும் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகள் பிரச்னை என்பதால் களத்துக்கு எடப்பாடியார் வருகிறார், அதை திமுக அரசால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!