திமுகஊழல் கட்சி.. அதிமுக அப்படியல்ல.. மதுரையில் முழங்கிய அண்ணாமலை..!

By T BalamurukanFirst Published Oct 13, 2020, 9:38 AM IST
Highlights

'ஊழல் குற்றச்சாட்டுகள், குடும்ப அரசியலால் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிரான ஓட்டுக்களே அதிகம் விழும்,' என மதுரையில் பா.ஜ., மாநில துணை தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலை தெரிவித்தார்.
 

 

'ஊழல் குற்றச்சாட்டுகள், குடும்ப அரசியலால் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிரான ஓட்டுக்களே அதிகம் விழும்,' என மதுரையில் பா.ஜ., மாநில துணை தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற இம்மையில் நன்மை தருவார் கோயிலில் குடும்பத்தினருடன் அவர் தரிசனம் செய்தார் அப்போது பேசியவர்..
பா.ஜ.க சித்தாந்தங்களுடன் ஒத்த கருத்து கொண்டவர்கள் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது குஷ்பு உள்ளிட்ட மூவர் இணைந்துள்ளனர். குஷ்பூ எந்த கருத்தையும் ஆணித்தரமாக எடுத்து வைப்பவர். அவர் பா.ஜ.,வில் தனக்கான பணியை முன் எடுத்து செல்வார். குறுநில மன்னர்களை போல தி.மு.க.,வில் குடும்ப அரசியல் தொடர்வதால் மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள், தி.மு.க., முன்னாள் மத்தியமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை போன்றவைகளால் தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிரான ஓட்டுக்களே அதிகம் விழும்.அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் நடந்தது போன்ற பிம்பத்தை தி.மு.க., போன்ற எதிர்கட்சிகள் ஏற்படுத்துகின்றன. தி.மு.க., போல அ.தி.மு.க.,விற்கு எதிராக ஆதாரப்பூர்வமான ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை.பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தேர்தலில் நான் போட்டியிடுவது என் கையில் இல்லை. தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன். தற்போது பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று வருகிறேன், என்றார். 

click me!