திமுக- காங்கிரஸ்- மதிமுக- விசிக வேட்பாளர் பட்டியல் வெளியானது... யார் யாருக்கு எந்தெந்த தொகுதி..?

By Thiraviaraj RMFirst Published Mar 15, 2019, 4:25 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் எட்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்கும் திமுக கட்சியின் சார்பில் யார் யார் எந்தத் தொகுதிகளில் களமிறங்க உள்ளனர் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. 
 

மக்களவை தேர்தலில் எட்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்கும் திமுக கட்சியின் சார்பில் யார் யார் எந்தத் தொகுதிகளில் களமிறங்க உள்ளனர் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. 

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் காங்கிரஸ் 10 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி- 2 விசிக-2 மதிமுக-1 ஐஜேகே-1 இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-1 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-1 என மொத்தம் 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. 

மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக களமிறங்க உள்ளது. இதில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணியில் மீதமுள்ள 36 தொகுதிகளுக்கான வேட்பாளாரக யார் நிறுத்தப்பட உள்ளனர் என்கிற உத்தேசப்பட்டியல் விபரம் தெரிய வந்துள்ளது.

 

அதன்படி தென் சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் , மத்திய சென்னை – தயாநிதி மாறன், வட சென்னையில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன் டாக்டர் கலாநிதி, தூத்துக்குடியில் கனிமொழி வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சியில் பொன்முடி மகன்  பொன்.கவுதமசிகாமணி கடலூர் தொகுதியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகன் கதிரவன், திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். தஞ்சாவூரில் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் போட்டியிட இருக்கிறார். 

மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டியிட உள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நாகை தொகுதியில் டி.ராஜா. திருப்பூரில் சுப்பராயன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி களமிறங்குகிறார். ஐஜேகே கட்சியை சேர்ந்த பாரிவேந்தர்  பெரம்பலூரில் மோத உள்ளார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் நாமக்கல் தொகுதியில் ஈஸ்வரன் களமிறங்குகிறார். 

காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை அல்லது விக்டரி ஜெயக்குமார் ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடலாம். சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அல்லது அவரது மருமகள் ஸ்ரீநிதி களமிறங்கலாம். விருதுநகரில் மாணிக் தாகூர்  தேனி தொகுதியில் ஜே.எம்.ஆரூண் திருச்சியில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அல்லது அடைக்கலராஜ் மகன் லூயிஸ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம். கரூரில்  ஜோதிமணி, கிருஷ்ணகிரி தொகுதியில் டாக்டர் செல்லக்குமார்  ஆரணியில் நாசே.ராமச்சந்திரன், கன்னியாகுமரி - ராபர்ட் புரூஸ் அல்லது வசந்த குமார் ஆகியோர் களமிறக்கப்பட உள்ளனர். 

click me!