திமுக கூட்டணி மதுரை தொகுதி வேட்பாளர் அறிவிப்பு... ஆதரிப்பாரா அழகிரி..?

By Thiraviaraj RMFirst Published Mar 15, 2019, 3:34 PM IST
Highlights

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கோவை, மதுரை தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அக்கட்சியின் பாலகிருஷ்ணன் அறிவித்தார். அதன்படி மதுரை மக்களவை தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் கோவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். மதுரை மாவட்டம் ஹார்விபட்டியை சேர்ந்தவர். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம்., பட்டம் பெற்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கிறார். மதுரை புறநகர் மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினரான இவர் 2011-ல் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டவர். சாகித்ய அகாடமி விருதுபெற்ற காவல் கோட்டம்  நாவல் மற்றும் புகழ்பெற்ற வேள்பாரி போன்ற நூல்களை எழுதியுள்ளார். 

கோவை தொகுதியில் போட்டியிட உள்ள பி.ஆர். நடராஜன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். 2009 ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்றுள்ளார்.  கோவையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட மார்க்சிஸ்ட் கட்சி தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

மதுரையை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பலமுறை வென்றுள்ளது. இருப்பினும் இம்முறை மு.க.அழகிரி கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படாத விரக்தியில் இருப்பதால் திமுக கூட்டணிக்கு பாடம் புகட்ட அவரது ஆதரவாளர்கள் உள்ளடி வேலைகளில் ஈடுபடலாம் எனக் கருதப்படுகிறது. அதையும் தாண்டி சு.வெங்கடேசன் வெற்றிபெறுவாரா? என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வரும். அதேபோல் கோவையை பொறுத்தவரை பாஜகவுக்கு பலமாக உள்ள தொகுதி. அங்கு பி.ஆர்.நடராஜன் களமிறகப்பட்டுள்ளார். 

click me!