மு.க.ஸ்டாலினுக்கு முன்பே வேட்பாளரை அறிவித்து அதிரடி... கூரியர் நிறுவன ஓனருக்கு அடித்தது வாய்ப்பு..!

By Thiraviaraj RMFirst Published Mar 15, 2019, 1:43 PM IST
Highlights

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக வேட்பாளரை அறிவிக்கும் முன்பே இந்திய முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. 
 

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக வேட்பாளரை அறிவிக்கும் முன்பே இந்திய முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகைதீன் ராமநாதபுரம் வேட்பாளராக நவாஸ் கனி என்பவரை அறிவித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் முஸ்லீம் மக்கள் அதிகமானோர் வசித்துப் வருகின்றனர். இதனால் அந்தத் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. 

அதன்படி நவாஸ் கனி வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். பெரும் கோடீஸ்வரரான இவர் பிகழ் பெற்ற எஸ்.டி. கூரியர் நிறுவத்தின் உரிமையாளர். 80 வயதை கடந்துவிட்ட காதர் மொஹைதீன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், வயது மற்றும் உடல்நலம் காரணமாக அவர் ஒதுங்கிக் கொண்டு நவாஸ் கனிக்கு வாய்ப்பளித்து இருக்கிறார். ராமநாதபுரம் நிச்சயம் ஒதுக்கப்படும் என்பதால் நவாஸ் கனி முன்பே தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். 

ராமநாதபுரத்தில் முஸ்லீம் வேட்பாளர் களமிறங்கி உள்ளதால் அதிமுக சார்பில் சிட்டிங் எம்.பியான அன்வர் ராஜாவுக்கு சீட் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முஸ்லீம் வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளதால் அதிமுகவும் அதே வழியை பின்பற்றும் என்பதால் மாற்று மதத்தினருக்கு அதிமுக வாய்ப்பளிக்காது எனக் கூறப்படுகிறது. 

click me!