வேட்பாளரே இல்லாமல் தை அமாவாசையில் பிரசாரத்தை தொடங்கிய திராவிட மாடல் ஆட்சியாளர்கள்

By Velmurugan sFirst Published Jan 21, 2023, 11:14 AM IST
Highlights

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், தை அமாவாசையான இன்று திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளனர்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி வருகின்ற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற பிப்.27ல் இடைத்தேர்தல்

எதிர் தரப்பில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகிறது. அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடுகள் தற்போது வரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், காங்கிரஸ், அதிமுக இடையே நேரடி போட்டி என்பது உறுதியாகிவிட்டது.

தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர் அறிவிக்கப்படும் முன்பே அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் தங்களது பிரசாரத்தை இன்று தொடங்கினர். வேட்பாளர் இல்லாத காரணத்தால், காங்கிரசின் சின்னமான கை சின்னத்தை காண்பித்தவாறு வாக்கு சேகரித்துச் சென்றனர்.

 

10 ஆண்டு குடும்ப வாழ்க்கை ஆனால், திருமணம் செய்ய மறுக்கிறார்; மதபோதகர் மீது பெண் புகார்

புதிதாக தொடங்கப்படும் தொழில், பணி சிறப்பாக அமைய அமாவாசை நாள் மிகவும் உகந்தது என்று கூறுவார்கள். அந்த வகையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற முழு தை அமாவாசை தினமான இன்று திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்தை வேட்பாளர் இல்லாமலேயே தொடங்கி இருப்பதாக நெட்டிசன்கள் விசமர்சம் செய்துள்ளனர். மேலும் மத நம்பிக்கையில், இவ்வளவு பிடிப்புடன் இருக்கும் இது தான் திராவிட மாடல் ஆட்சியா என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

click me!