அழகிரியை பதவியிலிருந்து தூக்கு!: ராகுலுக்கு கட் அண்டு ரைட்டாக கட்டளையிடும் ஸ்டாலின்...!!

By Vishnu PriyaFirst Published Jan 17, 2020, 6:19 PM IST
Highlights

சிதம்பரத்துக்கு தி.மு.க.வை எப்போதுமே ஆகாது. கருணாநிதியை கூட மரியாதை அடிப்படையில் டைஜஸ் செய்தார். ஆனால் ஸ்டாலினை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தினால் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியே பிளந்து போகுமளவுக்கு மோதல் உச்சம் பெற்று நிற்கிறது. இதற்கு காரணம் ஜஸ்ட் கே.எஸ்.அழகிரி மற்றும் தமிழக காங்கிரஸின் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி இருவரின் கடுப்பு அறிக்கையின் வெளிப்பாடு!  என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். கூட்டணியில் இரு கட்சிகளுக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தின் பின்னணியில் மிகப்பெரிய தலைகள் உள்ளனர்.

தங்களை மதிக்காத தி.மு.க. கூட்டணியிலிருந்து  பிரிந்தே ஆக வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ் வி.ஐ.பி.க்கள்!  இந்த கூட்டணி உடைபட்டே தீர வேண்டும் என்று நினைக்கும் பா.ஜ.க. புள்ளிகள்! ஓட்டு வங்கி இல்லாத காங்கிரஸ் நம்மோடு இருப்பதால்  தேவையில்லாமல் சீட்கள் பறிபோகிறதே! என்று கடுப்பாகும் தி.மு.க.வினர் என்று ஆரம்பித்து போட்டி, பொறாமை,கடுப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் பஞ்சாயத்துகள், அரசியல் கால்குலேஷன்கள் என பெரிய பெரிய விவகாரங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. உரசலுக்கு பின்  கூட்டணி பிளவில் மிக குறியாகவே இருக்கிறார் ஸ்டாலின். 

சமாதானம் ஆவதற்கு அவர் தயாரில்லை. ஆனால் காங்கிரஸோ, தமிழகத்தைப் பொறுத்தவரையில் தி.மு.க.வின் அரவணைப்பில் இருந்து விலகுவதென்பது தற்கொலைக்கு சமம்! என்றே நினைக்கிறார்கள். தனித்து நின்றாலோ, மூன்றாவது அணி அமைத்தாலோ, அ.தி.மு.க.வுடன் கை குலுக்கினாலோ நிச்சயம் தங்களுக்கு பின்னடைவுதான்! என்றுதான் நினைக்கிறது காங்கிரஸ் தலைமை. அதனால்தான் மீண்டும் மீண்டும் ஸ்டாலினை சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர். 
பிளவில் உறுதியாக இருக்கும் ஸ்டாலின் அதிலிருந்து கூட மனம் இறங்கி வந்து, தன்னை மாற்றிக் கொள்ளலாம்.

ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை மாற்றியே ஆக வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். தன்னை சமாதானம் செய்ய தொடர்பு கொண்ட ராகுல் மற்றும் சோனியாவின் பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற தேர்தல்ல நம்ம கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. எங்க கட்சி வேட்பாளர்களுக்கு கொடுத்த அதே  முக்கியத்துவத்தை தான் உங்க வேட்பாளர்களுக்கும் கொடுத்து, பிரசாரம் செய்து வெற்றி பெற வைத்தேன். 

ஆனால் உங்களோட கே.எஸ். அழகிரியின் இந்த செயல் கூட்டணியின் கட்டுப்பாட்டை அசிங்கப்படுத்திடுச்சு. எதிர்க்கட்சிகள் முன்னாடி கேவலப்படுத்தியிருக்கிறார். அவர் யாரோட தூண்டுதல்ல இதை பண்றார்? முதல்ல அவரை மாத்திட்டு, கூட்டணியின் நன்மைக்கு பிரச்னை தராத நபரை நியமிங்க. அதை செய்யாம எங்கிட்ட சமாதானம் பேசி எந்த பலனுமில்லை! என்று மிக உறுதியாக சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி இப்படி கூட்டணிக்கு குண்டு வைப்பது போல் பேசியிருப்பதன் பின்னணி, காங்கிரஸின் முக்கிய தலைகள் ஒருவரான ப.சிதம்பரமே! என்று புதிய விவகாரத்தை கிளப்பியுள்ளனர் சில தி.மு.க.வினர். 

துரைமுருகனின் அதிரடி கருத்துக்களுக்கு கார்த்தி சிதம்பரம் சுடச்சுட பதிலடிகொடுத்ததும், கே.எஸ்.அழகிரி ஏற்கனவே ப.சிதம்பரத்தின் கோஷ்டியை சேர்ந்தவர் என்பதும் இந்த கருத்துக்கு வலு ஊட்டியிருக்கிறது. சிதம்பரத்துக்கு தி.மு.க.வை எப்போதுமே ஆகாது. கருணாநிதியை கூட மரியாதை அடிப்படையில் டைஜஸ் செய்தார். ஆனால் ஸ்டாலினை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தமிழக காங்கிரஸ் விஷயத்தில் ப.சிதம்பரம் போடும் கணக்குகளுக்கு, கூட்டணி தலைவர் எனும் முறையில் ஸ்டாலின் வைக்கும் செக்-களே அவரது கடுப்புக்கு முக்கிய காரணம். 
ஆக! அழகிரியை மாற்றுவாரா அல்லது கூட்டணியை மாற்றுவாரா ராகுல்?


-விஷ்ணுப்ரியா

click me!