
தி.மு.க. ஒரு குடும்ப கட்சிதான்! நல்ல நாளில் அப்பா_ அம்மாவிடம் ஆசி வாங்குவது, ஒரு வெற்றி கிடைத்தால் அப்பாவிடம் அதை காட்டி மகிழ்வது என்று சாதாரணமாக ஒரு குடும்பத்திற்குள் இருக்கும் அத்தனை போக்குவரத்துகளும் தி.மு.க.வின் தலைமை குடும்பமான கருணாநிதியின் குடும்பத்தில் நடக்கும்.
அந்த வகையில் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைர விழா அழைப்பிதலை நேற்றும் ஸ்டாலினும், கழக முதன்மைச்செயலாளர் துரைமுருகனும் கருணாநிதியிடம் முறைப்படி வழங்கியிருக்கின்றனர்.
மிக சுகவீனமாக இருக்கும் கருணாநிதியிடம் இதை வழங்கியதை வெறும் செய்தியாக சொல்லிவிடாமல், அதை போட்டோ எடுத்தும் வெளியிட்டிருக்கின்றனர். உடல் மிக தளர்ந்து, கறுத்து இருக்கும் கருணாநிதியின் உருவம் எந்தவித ஈகோ சமரசமும் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கிறது.
கருணாநிதியின் உடல் அமைப்பை, நிலையை பார்க்கும் தொண்டர்களுக்கு வருத்தம் தோண்றினாலும் கூட தலைவருக்கும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இடையில் எந்த திரையும் போடாத பண்பு அவர்களை சிலிர்க்க வைத்திருக்கிறது.
இதைப்பார்த்து சிலர் இனி திருந்தினாலும் எந்த பலனுமில்லை.