நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு; காவல்துறை விசாரணை

Published : Feb 27, 2023, 01:59 PM ISTUpdated : Feb 27, 2023, 02:33 PM IST
நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில்  மது பாட்டில் வீச்சு; காவல்துறை விசாரணை

சுருக்கம்

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பொதுக்கூட்ட மேடையி்ல் பேசசிக்கொண்டிருந்த போது அவர் மீது மது பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே சித்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அலாவுதீன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திமுகவை விமர்சித்து பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது பத்துக்கும் மேற்பட்டவர்கள் பொதுக்கூட்ட மேடையை நோக்கி மது பாட்டில்களை வீசினர். எதிர்பாராத விதமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இருப்பினும் பொதுக்கூட்டத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் துறையினர் மது பாட்டில்களை வீசிவிட்டு ஓடி சென்றவர்களில் இருவரை பிடித்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டு பின்னர் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!