நில தகராறு.. அரசு மருத்துவரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகி.. அதிர்ச்சி வீடியோ..!!

Published : Oct 19, 2022, 01:56 PM IST
நில தகராறு.. அரசு மருத்துவரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகி.. அதிர்ச்சி வீடியோ..!!

சுருக்கம்

நாகப்பட்டினத்தில் நில தகராறு தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர், அரசு சித்தா மருத்துவர் மற்றும் அவரது தாயார் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராக பணிபுரியும் ஆறுமுகம் என்பவர் நாகப்பட்டினம் பெரிய கடை வீதியில் கிளினிக் வைத்துள்ளார். அதன் அருகிலேயே அமிர்தாலயா என்ற பெயரில் மருந்து விற்பனை கடையும் உள்ளது.

இவர் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தனது கிளினிக்கில் நோயாளிகளை பார்ப்பது வழக்கம். இந்நிலையில் ஆறுமுகத்திற்கும், அதே தெருவில் பழக்கடை நடத்தி வரும் சண்முகம் மற்றும் அவரது மகன் மணிமாறன் ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:தூத்துக்குடி துப்பாக்கி சூடு.! திசை திருப்பவே உண்ணாவிரதம்.!அப்பாவி போல நடித்தவர் தான் இபிஎஸ்.!கே. பாலகிருஷ்ணன்

இதுதொடர்பாக ஆறுமுகம் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருக்கிறர்.  இந்த புகாரின்பேரில் காவல்துறையினர் இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. அப்போது பழக்கடை வியாபாரி சண்முகம் தரப்பினர், திமுக வார்டு செயலாளர் பாபுவுடன் சென்றுள்ளனர். 

மேலும் காவல் நிலையத்தில் வைத்து திமுக நிர்வாகி பாபு நடத்திய பேச்சுவார்த்தைக்கு, மருத்துவர் ஆறுமுகம் உடன்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அடியாட்களுடன் சித்த மருத்துவர் கிளினிக்கிற்கு சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.

மேலும் படிக்க:ஷாக்கிங் நியூஸ்.. நீ எந்த ஊர்? என்ன ஜாதி? கேட்டு பள்ளி மாணவன் மீது கொடூர தாக்குதல்..!

அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்தது மட்டுமில்லாமல் அதனை தடுக்க வந்த மருத்துவர் ஆறுமுகம், அவரது தாய் சாந்தி ஆகியோரையும் திமுக நிர்வாகி பாபு தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!