சட்டமன்ற தேர்தலில் திமுக- பாஜக கூட்டணியா? டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்..!

By vinoth kumarFirst Published Oct 8, 2020, 5:23 PM IST
Highlights

அதிமுக மீது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நம்பிக்கை குறைந்து வருவதால் அவர் இந்த கருத்தை கூறியிருக்கலாம் என திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

அதிமுக மீது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நம்பிக்கை குறைந்து வருவதால் அவர் இந்த கருத்தை கூறியிருக்கலாம் என திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பாஜவை பொறுத்தவரை வரும் காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமையலாம் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக உருவாகியுள்ளது.,.  

இந்நிலையில், இது தொடர்பாக திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தேர்தல் நேரத்தில் சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. அதிமுக மீது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நம்பிக்கை குறைந்து வருவதால் அவர் இந்த கருத்தை கூறியிருக்கலாம். திமுக கூட்டணியில் பாஜக இடம்பெறலாம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதற்கு டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். 

மேலும், திமுக கூட்டணியில் யார் இடம்பெற வேண்டும் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்ய வேண்டும். பாஜகவின் மக்கள் விரோத செயல்களை திமுக மிகக்கடுமையாக தொடர்ந்து எதிர்க்கும். ஆகையால், திமுக- பாஜக கூட்டணிக்கான வாய்ப்பில்லை என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

click me!