தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை..!! அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்.

Published : Oct 08, 2020, 04:09 PM IST
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை..!! அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்.

சுருக்கம்

ஆந்திராவில் பள்ளிகள் திறக்கபட்ட ஒரே வாரத்தில் 26 மாணவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் பள்ளிகள் திறந்த ஒரே வாரத்தில் 26 மாணவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கபட்டு சிலர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களை சார்ந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், பள்ளிகல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் அகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், 

பள்ளிகளை திறப்பதற்கான எந்த வித சாத்திய கூறுகளும் இல்லை, ஆந்திராவில் பள்ளிகள் திறக்கபட்ட ஒரே வாரத்தில் 26 மாணவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதைகாட்டிலும் மாணவர்களின் உயிர் முக்கியம் என்ற அடிப்படையில் இந்த அரசு அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனா வைரசின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது. இதற்க்கு பிறகு முதலமைச்சர் மக்கள் நல்வாழ்வு துறை ,வருவாய் துறை ,பள்ளி கல்வி துறை  ஒருகிணைந்து ஒரு கூட்டம் நடைபெறற பின்னரே முடிவு எடுக்கபடும். 

வருகின்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள், இயற்க்கை நமக்கு சாதமாக இருக்கிறது, ,தொழிலதிபர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள், கல்வியாளர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள், வேளான் விவசாயிகள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள், இது மகிழ்ச்சி தருகிற ஆண்டாக இருந்து வருகிறது. ஆகவே அ.தி.மு.க பொறுத்த வகையில் முதலமைச்சர் அவர்களின் நேற்றைய அறிப்புக்கு பிறகு பெரிய மாற்றங்கள் தற்போது தமிழ்நாட்டில் உருவாகி கொண்டிருகிறது. மேலும் அதிமுகவின் வெற்றி எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார்.
 

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!