எதிர்போகுமா தேர்போகி...? அமமுகவில் இருந்து தூண்டில் போடும் திமுக... திணறும் டி.டி.வி..!

Published : Jul 29, 2021, 04:19 PM IST
எதிர்போகுமா தேர்போகி...? அமமுகவில் இருந்து தூண்டில் போடும் திமுக... திணறும் டி.டி.வி..!

சுருக்கம்

தேர்போகி பாண்டி எதிர்போக மாட்டார் என நம்பிக் கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

அமமுகவில் அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனையும் அவரது மகன் ஆனந்தையும் பழைய பாசத்தில் வளைத்துப் பிடித்துக் கொண்டுபோய் அறிவாலயத்தில் நிறுத்தி விட்டார் போக்குவரத்து துறை அமைச்சரான ராஜகண்ணப்பன்.

 அமமுக வேட்பாளர்களாக சட்டப் பேரவைத் தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்ட ஆனந்தும், காரைக்குடியில் போட்டியிட்ட தேர்போகி பாண்டியும் எப்படியும் வெற்றிபெறுவார்கள் என்று நம்பினாராம் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். அதற்காக இருவருக்கும் தாராளமாக நிதியுதவியும் செய்து கொடுத்துள்ளார். 

இருந்தபோதும் இருவரும் கரைசேர முடியவில்லை. இதற்கு மேல் இங்கிருந்தால் முதலுக்கே மோசம் வந்துவிடும், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்வோம் என நினைத்து, அப்பாவும், பிள்ளையுமான வ.து.நடராஜனும், ஆனந்தும் அப்பீட் ஆகிவிட்டார்களாம். ஆர்.எஸ். மங்களம் ஒன்றிய திமுக செயலாளர் பதவியை ஆனந்த் குறிவைப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அடுத்ததாக தேர்போகி பாண்டிக்கும் வடம் போட்டிருக்கிறதாம் திமுக. ஆனாலும் தேர்போகி பாண்டி எதிர்போக மாட்டார் என நம்பிக் கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

PREV
click me!

Recommended Stories

பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!
பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!