உங்க ஏரியாவுல பிரச்சனையா.. ஒரு போட்டோ மட்டும் போடுங்க, உடனடி தீர்வு... தூள்கிளப்பும் போக்குவரத்து போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jul 29, 2021, 3:02 PM IST
Highlights

குறிப்பாக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தம்  போன்ற போக்குவரத்து பிரச்சனைகள்  குறித்து பொதுமக்கள் புகைப்படத்துடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். பொதுமக்கள் பதிவிட்ட தோடு மட்டுமல்லாது, கிரேட்டர் சென்னை ட்ராபிக் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்து பதிவிடுகின்றனர். 

போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் புகார் கொடுத்தால் சென்னை போக்குவரத்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதற்கு பொதுமக்கள் பாராட்டு குவிகிறது  சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ட்விட்டர் பக்கம் ஒன்றை கையாண்டு வருகிறது. போக்குவரத்து காவல் துறையின் புதிய கூடுதல் ஆணையராக பிரதீப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் நவீன யுகத்திற்கு ஏற்ப சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

குறிப்பாக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தம்  போன்ற போக்குவரத்து பிரச்சனைகள்  குறித்து பொதுமக்கள் புகைப்படத்துடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். பொதுமக்கள் பதிவிட்ட தோடு மட்டுமல்லாது, கிரேட்டர் சென்னை ட்ராபிக் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்து பதிவிடுகின்றனர். அவ்வாறு பதிவிட்ட 7 முதல் 10நாட்களில் குறிப்ப்பிட்ட புகார் மீது நடவடிக்கைகள் எடுத்து, அதை புகைப்படத்துடன் ட்விட்டர் பக்கத்தில் போக்குவரத்து காவல்துறை பதிவிட்டு வருகிறது. குறிப்பாக புகார் அளித்த நபருக்கும் ட்விட்டர் மூலமே நடவடிக்கைகள் தொடர்பாக பதிலளித்து வருகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் சூர்ய நாரயண செட்டி சாலையில் ஷிப்ரா க்ராசிக் கோடுகள் வண்ணம் தீட்டியுள்ளனர். சிட்லப்பாக்கம் வரதராஜா திரையரங்கு அருகில் மாநகரப் பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பிரச்சனை ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் அளித்தவுடன்  நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

சென்னை  ரிச்சி தெருவில் நுழைய முடியாதபடி விதிகளை மீறி இருசக்கர வாகனங்கள் அண்ணாசாலையில் நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனை அருகே போக்குவரத்து சிக்னல் முறையாக செயல்படவில்லை என்ற புகார் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனை அருகே மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து போக்குவரத்து  காவலர்கள் போடப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புகைப்படத்துடன் சென்னை போக்குவரத்து காவல்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 

click me!