கொரோனா தடுப்பூசி டோக்கனை பறித்து திமுகவினர் அட்டூழியம்... அடித்தட்டு மக்கள் அதிர்ச்சி..!

By Thiraviaraj RMFirst Published Jun 3, 2021, 5:52 PM IST
Highlights

அந்த வீடியோவில் நான்தான் டோக்கன் தருவேன் என திமுக பிரமுகர் கூறவதும், மக்கள் அதை தட்டிக் கேட்டு புகார் அளிக்க போவதாக சொல்வதும் பதிவாகியுள்ளது. 


கொரோனா இரண்டாவது அலையால் நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியாகும் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக குறைந்தாலும், குறிப்பாக கோவை மாவட்டத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் வருமுன் காக்க வேண்டி தடுப்பூசிகளை நாடிச் செல்கின்றனர். ஆனால் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஒவ்வொரு நாளும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்தையே சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை அடுத்து துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் தடுப்பூசி மையத்தை திமுகவினர் ஆக்கிரமித்துள்ளனர்.

கோவை,வெள்ளக்கிணறு பகுதியில் தடுப்பூசி போடும் மையத்தில் சரவணம்பட்டி திமுக பொறுப்பாளர் ௮ருள்குமார், மாநகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு போடப்படும் தடுப்பூசிக்கான டோக்கனை நான் தான் தருவேன் ௭ன்றும் யாருகிட்ட புகார் ௮ளித்தாலும் பயமில்லை ௭ன்றும் கூறி தகராறு.
விடியலே..வா...வா... pic.twitter.com/n2IL1yDj2F

— Sowdha Mani (@SowdhaMani7)

 

தடுப்பூசி போட வரும் பயனாளர்களிடம் சரவணம்பட்டி திமுக பொறுப்பாளர் அருள்குமார் என்பவர், மாநகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு போடப்படும் தடுப்பூசிக்கான டோக்கனை நான் தான் தருவேன் என கூறி அனைத்து டோக்கன்களையும் தன் வசம் வைத்து அட்டூழியம் செய்து வருகிறார். இது குறித்து யாரிடம் வேண்டுமானாலும் புகார்  அளியுங்கள். அதை பற்றி எனக்கு எந்த பயமும் இல்லை என கூறி அராஜகத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் நான்தான் டோக்கன் தருவேன் என திமுக பிரமுகர் கூறவதும், மக்கள் அதை தட்டிக் கேட்டு புகார் அளிக்க போவதாக சொல்வதும் பதிவாகியுள்ளது. மக்கள் தங்கள் உயிரை காக்க போராடும் இந்த வேளையில் ஆளுங்கட்சியினர் தடுப்பூசி போடும் விவகாரத்தில் தலையிட்டு அராஜகம் செய்து வருவது அடித்தட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

click me!