கோயம்பேடு வணிக வளாகத்தில் மீண்டும் கூட்டம் நெரிசல்.. அலறிய அடித்து ஓடிய அதிகாரிகள்.. அவரச ஆலோசனை.

By Ezhilarasan BabuFirst Published Jun 3, 2021, 5:34 PM IST
Highlights

கோயம்பேடு வணிக வளாகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்றுவதை கண்காணிக்க குழு அமைக்கபட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

கோயம்பேடு வணிக வளாகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்றுவதை கண்காணிக்க குழு அமைக்கபட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக  சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை காய்கறி விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்கி செல்லும் வியாபாரிகள் பின்பற்றவில்லை எனவும் அனைத்து விதமான நடமாடும் காய்கறி விற்பனை வியாபாரிகள் தினமும் 10,000 த்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கோயம்பேட்டில் கூடுவதால் சமூக இடைவெளி அற்ற கூட்ட நெரிசல் காணப்படுவதாகவும் புகார் எழுந்தது. 

அதனையடுத்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மாநகர காவல் ஆணையர், சங்கர் ஜிவால், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் சுன்சோங்கம் ஜெடக் சிரு மற்றும் கோயம்பேடு வருவாய் நிர்வாக அதிகாரி கோவிந்த் ராஜ் ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோயம்பேடு சந்தையில், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது, கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்துவது விழிப்புணர்வை மேலும் மேம்படுத்துவது குறித்தும் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைந்து செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

1 மணிநேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த பணிகளை கண்காணிக்க காவல் துறை அதிகாரி மாநகராட்சி அதிகாரி சிஎம்டிஏ அதிகாரி மற்றும் வருவாய் அதிகாரி என 4 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. விரைவில் அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!