பிரியாணி ,சிக்கன் 65 ஏசி மண்டபம் -விவசாயிகளுக்காக திமுகவினர் போராட்டம் : வாட்ஸ் அப்பில் வைரலாகும் விமர்சனம்

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 03:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
பிரியாணி ,சிக்கன் 65 ஏசி மண்டபம் -விவசாயிகளுக்காக திமுகவினர் போராட்டம் : வாட்ஸ் அப்பில் வைரலாகும் விமர்சனம்

சுருக்கம்

காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாக நடக்கும் போக்கை கண்டித்து தமிழகம் முழுதும் பெரும் கொந்தளிப்பு காணப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்துள்ள விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

தமிழகம் முழுதும் 17,18 தேதிகளில் 48 மணி நேர தொடர் மறியலில் குதித்தனர். இந்நிலையில் நேற்று நடந்த மறியலில் சில கட்சிகள் தவிர தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சிகள் கலந்துகொண்டன. தமிழகத்தில் விவசாயிகள் சங்கத்தை ஒருங்கிணைத்து போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் நேற்று பெரம்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் கைது செய்யப்பட்ட அவர் ஓட்டெரியில் உள்ள ஏசி மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏசி மண்டபத்தில் பாட்டு பாடி குதூகலிக்கும் காட்சியும் , போராட்டம் குறித்து எதுவும் தலைவர்கள் எதுவும் விமர்சித்து பேசாமல் கூட்டத்தை முடித்தது, பிரியாணி ,சிக்கன் 65 வழங்கப்பட்டதும் வாட்ஸப்பில் வைரலாக பரவி விமர்சிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் நடந்த போராட்டத்தில் சமூக நலக்கூடம் ஒன்றில் அடைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் புழுக்கம் தாளாமல் தவித்ததாகவும்  அதனால் ஏசி மண்டபம் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என கருதியதால் போலீசாருடன் பேசி  ஸ்டாலின் கைது செய்யப்பட்டால் அடைக்க வேண்டிய ஏசி மண்டபம் குறித்து பேசி பின்னர் மண்டபம் புக செய்யப்பட்டு அதி அடைக்கப்பட்டனர்.

பொதுவாக கைது செய்யப்பட்டவர்களுக்கு சாப்பாடு போலீசார் அருகில் உள்ள ஹோட்டலில் வாங்கித்தருவார்கள் ஆனால் நேற்று திமுக மறியல் போராட்டத்தில்  கைதாகி ஏசி மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்களுக்கு பிரியாணி , சிக்கன் பீஸ் வழங்கப்பட்டது. மாலையில் மீண்டும் சிக்கன் 65 மற்றும் தேனீர் வழங்கப்பட்டது. 

தமிழகம் முழுதும் விவசாயிகள் காவிரி நீரின்றி வாடுகின்றனர், இதற்காக நாடு முழுதும் போராட்டம் வெடித்து கிளம்பி உள்ளது. விவசாயிகள் தண்டவாளத்தில் சோறு சமைத்து சாப்பிடுகிறார்கள். மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து சாதாரண மண்டபத்தில் அடைக்கப்பட்டு போலீசார் தரும் உணவை சாப்பிட்டு மாலையில் விடுதலையாகின்றனர். தஞ்சையில் நாள்  முழுதும் தண்டவாளத்திலேயே விவசாயிகள் சாப்பிடாமல் போராடினர் .

ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவின் முக்கிய தலைவர் கலந்துகொண்ட போராட்டத்தில் ஏசி மண்டபம் , பிரியாணி, சிக்கன் 65 சப்ளை செய்யப்பட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. இது போராடும் விவசாயிகளின் கோரிக்கை மீது இவர்களுக்கு எந்த அளவுக்கு அபிமானம் இருக்கிறது என்பதையே காட்டுகிறது என வாட்ஸ் அப்பில் விமர்சிக்கப்படுகிறது. 

அதே நேரம் மாறி வரும் கால கட்டத்தில் இதையெல்லாம் பார்பீர்களா போராட்டத்தில் ஈடுபடுவதை பாராட்ட வேண்டாம் விமர்சிக்காமலாவது இருக்கலாமே என்றும் வாட்ஸ் அப்பில் பதில் அளிக்கப்படுகிறது..

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!